UPDATED : செப் 24, 2024 05:17 PM
ADDED : செப் 24, 2024 03:27 PM

கொழும்பு: இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்று கொண்டார். அவருக்கு அதிபர் அனுரா திசநாயகே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் அனுரா திசநாயகே வெற்றி பெற்றார். நேற்று அவர் அதிபராக பதவியேற்றார். இதனையடுத்து பிரதமர் பதவியில் இருந்த தினேஷ் குணவர்தன ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், அந்நாட்டின் பிரதமராக ஹரிணி அமரசூரியா நியமிக்கப்பட்டார். இன்று அவர் பதவியேற்று கொண்டார். அவருக்கு அனுரா திசநாயகே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இலங்கையின் 16வது பிரதமரான அவருக்கு நீதி, கல்வி, தொழிலாளர், தொழில்துறை, சுகாதாரம், முதலீடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இலங்கையின் தேசிய மக்கள் சக்தி(என்பிபி) கட்சியை சேர்ந்த இவர் பிரபல கல்வியாளர், உரிமைகள் ஆர்வலர் ஆவார்.

