நேபாளத்தில் கடும் வெள்ளம்; நிலச்சரிவுக்கு 38 பேர் பலி!
நேபாளத்தில் கடும் வெள்ளம்; நிலச்சரிவுக்கு 38 பேர் பலி!
ADDED : செப் 28, 2024 06:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காத்மாண்டு: நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 38 பேர் பலியாகினர்.
இது குறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: நிலச்சரிவால் உயிரிழப்பு அதிகமாகலாம். கடந்த 30 மணி நேரத்தில் 29 பேரை காணவில்லை. உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் காத்மாண்டு பள்ளத்தாக்கை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
40 லட்சம் பேர் வெள்ளத்தாலும், போக்குவரத்து பிரச்னையாலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை, மீட்பு பணியாளர்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ரப்பர் படகு மூலம் காப்பாற்றி வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கனமழை, நாளை காலை வரை தொடரும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.