ADDED : மே 01, 2024 11:00 PM

ஜெட்டா: வளைகுடா நாடான சவுதி அரேபியாவில் பெய்து வரும் கனமழையால் முக்கிய நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
சவுதி அரேபியாவில் அடுத்த சில நாட்களில் கனமழை பெய்யும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து சவுதி அரேபியாவில் பரவலாக கனமழை வெளுத்து வாங்க துவங்கியது.
சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்து வருவதால், சாலைகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முக்கிய நகரங்களான ஜெட்டா, மதீனா, ராபிக் மற்றும் குலைஸ் ஆகிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்ட்டுள்ளது.
கடந்த மாதம் ஐக்கிய அரசு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய நாடுகளில் கனமழை காரணமாக துபாய், உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழக்கைபாதிக்கப்பட்டது. தற்போது சவுதி அரேபியாவை கனமழை புரட்டி போட்டுள்ளது.