லெபனான் இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்பொல்லா தளபதி பலி
லெபனான் இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்பொல்லா தளபதி பலி
ADDED : நவ 25, 2025 03:10 AM

பெய்ரூட்: லெபனானில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி அலி தப்டாபாய் கொல்லப்பட்டார்.
மே ற்காசிய நாடான லெபனானின் தலைநகர் பெய்ரூட்டின் ஹரத் ஹிரேக் என்ற பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பை, இஸ்ரேல் படைகள் நேற்று தாக்கின. இதில், ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி அலி தப்டாபாய் பலியானதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
தப்டாபாய், 1980ல் ஹிஸ்புல்லா அமைப்பில் இணைந்ததாகவும், அந்த இயக்கத்தின் முக்கிய அதிகார மையமாக திகழ்ந்ததாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 2016ல் இவரை பயங்கரவாதியாக அறிவித்த அமெரிக்கா, தகவல் அளிப்பவர்களுக்கு 44 கோடி ரூபாய் சன்மானம் தரப்படும் என்றும் அறிவித்திருந்தது.
இஸ்ரேலின் இந்த வான்வழி தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்தனர்; 28 பேர் காயமடைந்தனர். அலி தப்டாபாயின் மரணத்தை ஹிஸ்புல்லா அமைப்பும் உறுதி செய்துள்ளது.

