தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு உயர் கவுரவம்

 இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு உயர் கவுரவம்

 இந்திய வம்சாவளி பேராசிரியருக்கு உயர் கவுரவம்


ADDED : டிச 17, 2025 12:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 17, 2025 12:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொலம்பியா: மிசோரி பல்கலை.,யைச் சேர்ந்த இந்திய வம்சாவளி உட்பட இரு பேராசிரியர்கள், நடப்பாண்டுக்கான தேசிய கண்டுபிடிப்பாளர்கள் அகாடமியின் கவுரவ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

அமெரிக்காவின் என்.ஏ.ஐ., எனும் தேசிய கண்டுபிடிப்பாளர்கள் அகாடமி, சிறந்த கண்டுபிடிப்பாளர்களுக்கு உயர் கவுரவ விருது வழங்கி வருகிறது.

மக்களின் வாழ்க்கை தரம், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூகம் ஆகியவற்றுக்கு பயன் தரக்கூடிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியோருக்கு இந்த விருது வழங்கப்படும்.

அந்தவகையில், இந்தாண்டுக்கான என்.ஏ.ஐ., கவுரவ விருதுக்கு கொலம்பியாவின் மிசோரி பல்கலை.,யில் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சிறப்பு பேராசிரியராக பணியாற்றி வரும், இந்திய வம்சாவளி பேராசிரியர் ரகுராமன் கண்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அதே பல்கலையில் பணியாற்றும் தாவர மரபியல் பேராசிரியரான, ஆசிய நாடான வியட்நாமை பூர்வீகமாக கொண்ட ஹென்றி நுயென் என்பவரும் இக்கவுரவ பதவிக்காக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us