ADDED : மே 01, 2024 01:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பீஜிங்: சீனாவில் கனமழை காரணமாக நெடுஞ்சாலை சரிந்ததில், அந்த வழியாக சென்ற கார்கள் அதில் கவிழ்ந்து 19 பேர் உயிரிழந்தனர்.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ளது மெய்ஜோவு நகர். இங்கு, சமீப நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. இதன் காரணமாக, அந்நாட்டு நேரப்படி இன்று( மே 01) அதிகாலை 2 மணியளவில் அந்நகரில் உள்ள நெடுஞ்சாலை 18 மீட்டர் தூரம் அளவுக்கு சரிந்து விழுந்தது.
இரவு நேரத்தில் சரிவு ஏற்பட்டதால், அந்த வழியாக வந்த 18 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மேல் இருந்து கீழே உருண்டு விழுந்து தீப்பிடித்தன. இச்சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் 30 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.