sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஏப்ரல் 11, 2026 ,பங்குனி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

டிரம்புக்கு நோபல் பரிசு; உக்ரைனில் அமைதி ஏற்படுத்தினால் பரிந்துரைப்பேன் என்கிறார் இத்தாலி பிரதமர்

/

டிரம்புக்கு நோபல் பரிசு; உக்ரைனில் அமைதி ஏற்படுத்தினால் பரிந்துரைப்பேன் என்கிறார் இத்தாலி பிரதமர்

டிரம்புக்கு நோபல் பரிசு; உக்ரைனில் அமைதி ஏற்படுத்தினால் பரிந்துரைப்பேன் என்கிறார் இத்தாலி பிரதமர்

டிரம்புக்கு நோபல் பரிசு; உக்ரைனில் அமைதி ஏற்படுத்தினால் பரிந்துரைப்பேன் என்கிறார் இத்தாலி பிரதமர்

17


ADDED : ஜன 24, 2026 07:10 AM

Google News

ADDED : ஜன 24, 2026 07:10 AM

17


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நிருபர்

உக்ரைன் போருக்கு முடிவு கொண்டு வர அதிபர் டிரம்ப் உதவினால், அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்வேன் என இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசை வெல்லத் தவறியதில், அதிபர் டிரம்ப் நீண்ட காலமாக விரக்தியை வெளிப்படுத்தி வந்தார். 2025ம் ஆண்டுக்கான நோபல் பரிசை வென்ற வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோ டிரம்ப சந்தித்தார். அவர் தனக்கு வழங்கப்பட்ட நோபல் பதக்கத்தை அதிபர் டிரம்பிடம் ஒப்படைத்தார். இருந்தாலும் அதிபர் டிரம்ப் புலம்பி வருகிறார்.

அவர் நார்வே பிரதமர் ஜோனாஸ் காஹர் ஸ்டோருக்கு அனுப்பிய செய்தியில், பரிசு கிடைக்கவில்லை என்பதால் இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய அவசியமில்லை'' என அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். இந்த சூழலில், இத்தாலியில் நிருபர்கள் சந்திப்பில், அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி கூறியதாவது:

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெற்றி பெறுவார். ஒரு நாள் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க முடியும் என்று நான் நம்புகிறேன். உக்ரைனுக்கு ஒரு நிலையான அமைதியை அடைவதில் அவர் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினால், இறுதியாக, நாமும் டிரம்பை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்க முடியும். இது குறித்து நான் பரிசீலனை செய்வேன். இவ்வாறு ஜார்ஜியா மெலோனி கூறினார்.






      Dinamalar
      Follow us