UPDATED : ஏப் 16, 2020 06:26 PM
ADDED : ஏப் 16, 2020 05:47 PM

பீஜிங்: உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த வேளையில் சீனாவில் இருந்து எவ்வாறு கொரோனா வைரஸ் மற்ற நாடுகளுக்குப் பரவியது, வூஹானில் ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து கொரோனா வைரஸ் எப்படி கசிந்தது என்ற விசாரணை நடைபெற்ற வண்ணம் உள்ளது. வூஹான் வைராலஜி லேப்பில் இருந்து விஞ்ஞானிகள் கவனக்குறைவால் கொரோனா வைரஸ் உலகுக்குப் பரவியது என்ற பேச்சு கடந்த சில நாட்களாக உலக மீடியாக்களில் அடிபட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லை. சீனா மீது அமெரிக்க மீடியாக்கள் வீண்பழி சுமத்துகின்றன என கூறப்படுகிறது.


எது எப்படியோ தற்போது கொரோனா எவ்வாறு கசிந்தது என்பதை சோதனை செய்வதைக் காட்டிலும் கொரோனாவை உலக நாடுகளில் இருந்து முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது.

