UPDATED : ஜூலை 08, 2025 04:55 PM
ADDED : ஜூலை 08, 2025 07:02 AM

மேற்காசிய நாடான யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கோல்டன் விசா பெறுவதற்கான புதிய நடைமுறைகளை அறிமுகம் செய்துள்ளது. இது, இந்தியா மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும்.
இதன் சிறப்பு அம்சங்கள்
* வாழ்நாள் முழுதும் தங்கியிருக்கலாம்
* ஏற்கனவே உள்ள திட்டங்களின்படி, அந்த நாட்டில் குறைந்தபட்சம் 4.66 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தில் முதலீடு செய்ய தேவையில்லை. அதுபோல, தொழில்களிலும் முதலீடு செய்ய தேவையில்லை
* ஒரு முறை கட்டணமாக 23.30 லட்சம் ரூபாய் செலுத்தினால் போதும்
* இந்த கோல்டன் விசா பெற்றவர்கள், அந்த நாட்டில் தங்கியிருக்கலாம்; வேலை பார்க்கலாம்; படிக்கலாம்
* வாழ்நாள் முழுதும் செல்லுபடியாகும். அதே நேரத்தில் ஐந்து அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்து கொள்ள வேண்டும்
* உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் 'ஸ்பான்சர்' செய்ய தேவையில்லை
* இந்த விசா பெற்றவர்கள், வெளிநாடுகளில் ஆறு மாதங்கள் வரை தங்கலாம். அவர்களுடைய குடியிருக்கும் உரிமை பறிபோகாது
* எந்த வயதை சேர்ந்த குடும்ப உறுப்பினர்களையும் ஸ்பான்சர் செய்யலாம்
* எத்தனை வேலைக்காரர்களையும் அழைத்து செல்லலாம்
* கோல்டன் விசா பெற்றவர் உயிரிழந்த பிறகும், அவருடைய குடும்பத்தினர் தங்கியிருக்கலாம்
* முதலீட்டு கோல்டன் விசாக்களை போல் இல்லாமல், சொத்துக்களை விற்றாலும் இந்த நியமன கோல்டன் விசா காலாவதி ஆகாது.
என்னென்ன தகுதிகள்
* தனிப்பட்ட தொழில் அல்லது பணி பின்னணி
* சமூகத்துக்கான பங்களிப்பு
* யு.ஏ.இ.,யின் கலாசார, வர்த்தகம், அறிவியல், நிதி, ஸ்டார்அப் தொழில்களில் கிடைக்கக்கூடிய எதிர்கால பங்களிப்பு
* எவ்வித பண மோசடி, குற்ற வழக்கு இருக்கக்கூடாது
* சமூக வலைதள நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாக இருக்கக்கூடாது.
எப்படி விண்ணப்பிக்கலாம்
* கோல்டன் விசாக்கள், 'ராயட்' குழுமத்தால் கையாளப்படுகிறது. இந்த குழுமம், வி.எப்.எஸ்., மற்றும் ஒன் வாஸ்கோ ஆகிய நிறுவனங்களின் மையங்கள் வாயிலாக விண்ணப்பங்களை பெறும்
* இந்த நிறுவனங்களின் இணையதளம் அல்லது கால் சென்டர்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்
* அவை பரிசீலிக்கப்பட்டு, யு.ஏ.இ., அரசின் இறுதி ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.