அமெரிக்காவின் அற்புதமான நட்பு நாடு இந்தியா: சொல்கிறார் அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர்
அமெரிக்காவின் அற்புதமான நட்பு நாடு இந்தியா: சொல்கிறார் அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர்
ADDED : செப் 25, 2025 08:07 AM

வாஷிங்டன்: ''நான் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன். அது அமெரிக்காவின் அற்புதமான நட்பு நாடு'' என அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் கிறிஸ் ரைட் தெரிவித்தார்.
இது குறித்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நான் இந்தியாவின் மிகப்பெரிய ரசிகன். அது அமெரிக்காவின் அற்புதமான நட்பு நாடு. நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம். ஆனால் அது ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குகிறது. இது தான் இருநாட்டின் உறவில் உராய்விற்கு காரணம். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவும் அதையே விரும்புகிறது என்று நான் நம்புகிறேன்.
அமெரிக்கா இந்தியாவுடன் எரிசக்தி வர்த்தகத்தை விரிவுப்படுத்துவதை தவிர வேறு எதையும் விரும்பவில்லை. இந்த துறையில் இந்தியா ஒரு நட்சத்திரமாக இருந்து வருகிறது. ரஷ்ய கச்சா எண்ணெய் சீனா, இந்தியா மற்றும் துருக்கிக்கு செல்கிறது. பின்னர் அது உக்ரைனில் போருக்கு ரஷ்யா நிதியளிக்க உதவுகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. வேகமாக பொருளாதாரம் வளர்ந்து வருகிறது.
இந்தியாவில் எரிசக்தி தேவை அதிகரித்து வருகிறது. உலக அமைதியை நிலைநாட்டுவதே அதிபர் டிரம்பின் மிகப்பெரிய ஆர்வம். அமைதியை கொண்டு வருவது அவரது நோக்கம். அதற்கு நமது செல்வாக்கை எப்படி பயன்படுத்தலாம். உக்ரைனில் ரஷ்ய போர் நிச்சயமாக கொடூரமானது. அது முடிவுக்கு வருவதை நாம் அனைவரும் பார்க்க விரும்புகிறோம். இவ்வாறு கிறிஸ் ரைட் கூறினார்.