தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/மலைப்பாம்பிடம் சிக்கிய பெண் மரணப் பிடியில் தப்பினார்

மலைப்பாம்பிடம் சிக்கிய பெண் மரணப் பிடியில் தப்பினார்

மலைப்பாம்பிடம் சிக்கிய பெண் மரணப் பிடியில் தப்பினார்


ADDED : செப் 20, 2024 12:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2024 12:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாங்காங்: தாய்லாந்து நாட்டில் மலைப்பாம்பின் பிடியில் சிக்கிய பெண் பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் தப்பினார்.

பாங்காங்கின் புறநகர் பகுதியில் வசித்து வந்தவர் ஆரோம் அருண்ரோஜ் (60). இவர் வழக்கம் போல் சமையலறைக்கு சென்ற போது ஒரு மலைப்பாம்பு அவரை காலில் ஏறி தொடையில் கடித்து இடுப்பு வரை விறு, விறு என சுற்றி அந்த பெண்ணை இறுக்கியது. அய்யோ, அம்மா என்ற அலறலுடன் ஜன்னல் அருகில் வந்து காப்பாற்றுங்க என கூக்குரலிட்டார். யாரும் வரவில்லை, இரண்டரை மணி நேரம் கழித்து சிலர் வந்ததும் போலீசார் மற்றும் வன அலுவலர்கள் வந்து பாம்பை லாவகமாக பிடித்து பெண்ணின் இடுப்பில் இருந்து அகற்றினர்.

உடலில் பல பகுதிகளில் பாம்பு கடி காயம் இருந்தது. தொடர்ந்து அந்த பெண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாம்புடன் சுற்றிய படங்கள் சமூக வலை தளத்தில் பரவியது.

மலைப்பாம்பு எப்படி சாப்பிடும் ?

பொதுவாக மலைப்பாம்பு தனது இரைக்கு தேவைப்படும் உயிரினங்களை முதலில் வாயால் கடித்து அந்த பிடிப்பட்ட உயிரினத்தை தனது நீள உடலால் இறுக்க சுற்றி அழுத்தும். பின்னர் பிடிப்பட்ட விலங்கின் உயிர் மூச்சு நின்றதும் வாயில் தானாக கஷ்டப்பட்டு விழுங்கி விடும். ஒரு முறை உணவு எடுத்தால் சில நாட்களுக்கு மலைப்பாம்பு எதுவும் சாப்பிடாது. வயிறு முட்டினால் போதும் அசையாமல் கிடந்தபடி நல்ல அயர்ந்து தூங்கும் பழக்கம் கொண்டது மலைப்பாம்பு. மனிதர்களுக்கு கெடுதல் செய்யும் நோக்கம் அந்த பாம்பிற்கு கிடையாது.



தாய்லாந்தை பொறுத்தவரை மலைப்பாம்புகள் அதிகம் வாழுகிறது. இங்கு பாம்பு கடிப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2023ல் எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிவரப்படி தாய்லாந்தில் பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் 12 ஆயிரம் பேரை கடித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் பாம்பு கடித்து 26 பேர் கொல்லப்பட்டனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us