sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 25, 2026 ,பங்குனி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

நான் தான் வெனிசுலா அதிபர்: அறிவித்தார் டிரம்ப்

/

நான் தான் வெனிசுலா அதிபர்: அறிவித்தார் டிரம்ப்

நான் தான் வெனிசுலா அதிபர்: அறிவித்தார் டிரம்ப்

நான் தான் வெனிசுலா அதிபர்: அறிவித்தார் டிரம்ப்

19


UPDATED : ஜன 12, 2026 11:27 AM

ADDED : ஜன 12, 2026 11:24 AM

Google News

UPDATED : ஜன 12, 2026 11:27 AM ADDED : ஜன 12, 2026 11:24 AM

19


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நிருபர்

நான் தான் வெனிசுலா அதிபர் என்று கூறும் வகையில் சமூக வலைதளத்தில் படம் ஒன்றை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின் படி, ஜனவரி 3ல், தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நுழைந்த அமெரிக்க ராணுவத்தினர், அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும், அவரது மனைவி சிலியாவையும் கைது செய்தனர். போதைப்பொருள் பயங்கரவாதத்தை ஊக்குவித்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த சம்பவம் நடந்தது. தற்போது வெனிசுலா அதிபர் மதுரோ, அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மதுரோ கைதுக்கு பின் வெனிசுலாவில், துணை அதிபராக இருந்த டெல்சி ரோட்ரிகஸ் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார். இருப்பினும் வெனிசுலா நிர்வாகத்தை அதிபர் டிரம்ப் கட்டுப்படுத்துகிறார். கச்சா எண்ணெயை யாருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகள் விதித்துள்ளார். தற்போது வெனிசுலா தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில் ஆங்கிலத்தில், ''Acting President of Venezuela'' என குறிப்பிடப்பட்டு உள்ளது. நான் தான் வெனிசுலா அதிபர் என்று வெளிப்படையாக அறிவித்து இருப்பது, வெனிசுலா மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி வெனிசுலாவின் அண்டை நாடுகள் டிரம்பின் இத்தகைய நடவடிக்கையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.






      Dinamalar
      Follow us