sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

டில்லியில் ஏஐ உச்சி மாநாடு; இந்தியாவுக்கு ஐநா பாராட்டு

/

டில்லியில் ஏஐ உச்சி மாநாடு; இந்தியாவுக்கு ஐநா பாராட்டு

டில்லியில் ஏஐ உச்சி மாநாடு; இந்தியாவுக்கு ஐநா பாராட்டு

டில்லியில் ஏஐ உச்சி மாநாடு; இந்தியாவுக்கு ஐநா பாராட்டு

1


ADDED : பிப் 05, 2026 09:24 AM

Google News

1

ADDED : பிப் 05, 2026 09:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூயார்க்: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சிமாநாட்டிற்குத் தலைமை ஏற்றதற்காக இந்தியாவைப் பாராட்டுகிறேன் என ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

டில்லியில் வரும் பிப்ரவரி 19, 20ம் தேதிகளில், செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு மற்றும் கண்காட்சி நடக்க உள்ளது. இந்தியா ஏ.ஐ., தொழில்நுட்ப வளர்ச்சியில் செய்து வரும் திட்டங்கள் அதன் எதிர்கால தாக்கங்கள் குறித்து மாநாட்டில் விவரிக்கப்பட உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க ஐநா பொதுச்செயலாளர் இந்தியாவுக்கு வருகிறார். இந்த உச்சிமாநாட்டிற்குத் தலைமை ஏற்றதற்காக இந்தியாவை அன்டோனியோ குட்டரெஸ் பாராட்டினார்.



இது குறித்து அவர் கூறியதாவது: ஏஐ மாநாட்டில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைய காலகட்டத்தில் ஏஐ தொழில்நுட்பம் முக்கியமானதாக உருவெடுத்துள்ளது. இது குறித்து விவாதிப்பது மிகவும் முக்கியம். இந்த உச்சிமாநாட்டிற்கு தலைமைப் பொறுப்பை ஏற்றதற்காக இந்தியாவைப் பாராட்டுகிறேன்.

ஒரு வளரும் நாடான இந்தியாவிற்கு, ஏற்கனவே குறிப்பிடத்தக்க திறன்கள் இருந்தபோதிலும், மனித குலம் அடையப்போகும் நன்மையே இந்த உச்சிமாநாட்டின் மைய நோக்கமாக இருக்கும். மாநாடு அனைவருக்கும் வளர்ச்சியை ஏற்படுத்தும்.

இதன்மூலம் செயற்கை நுண்ணறிவின் உண்மையான தாக்கங்களை மதிப்பிடுவதற்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று நம்புகிறேன். இவ்வாறு அன்டோனியோ குட்டரெஸ் கூறினார்






      Dinamalar
      Follow us