sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 பனிமயமான பாலைவனம்: சவுதியை மூழ்கடித்த பனிப்பொழிவு

/

 பனிமயமான பாலைவனம்: சவுதியை மூழ்கடித்த பனிப்பொழிவு

 பனிமயமான பாலைவனம்: சவுதியை மூழ்கடித்த பனிப்பொழிவு

 பனிமயமான பாலைவனம்: சவுதியை மூழ்கடித்த பனிப்பொழிவு

9


ADDED : டிச 20, 2025 04:24 AM

Google News

ADDED : டிச 20, 2025 04:24 AM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரியாத்: மேற்காசியாவில் உள்ள பாலைவன பிரதேசமான சவுதி அரேபியா சுட்டெரிக்கும் வெயிலுக்கு பெயர் போனது. எப்போதும் வறண்ட வானிலையே காணப்படும் சவுதியில், இயற்கைக்கு மாறாக அங்கு கடும் பனிப்பொழிந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 17 முதல் தபுக், ஹெய்ல், ட்ரோஜெனா உள்ளிட்ட வடக்கு மாகாணங்களில் அதிக பனிப் பொழிவு பதிவாகி வருகிறது. ஜபல் அல்-லவ்ஸ் என்ற மலைப்பகுதி பனிக்குவியல்களால் மூடப்பட்டுள்ளது.

இதே போல, தலைநகர் ரியாத்தின் பெரும்பாலான பகுதிகளும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளன. வானிலை மோசமடைந்துள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அதிகாரிகள் வலியுறுத்தினர்.

சவுதி அரேபியாவின் முக்கிய பகுதிகள் வெண்ணிற போர்வை போர்த்தியது போல பனியால் மூடப்பட்டு இருக்கும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்ற ன.

சவுதி அரேபியாவில் ஏற்பட்ட பனிப்பொழிவுக்கு, காலநிலை காரணம் அல்ல என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

வானிலை ஆய்வாளர்கள் கூறியதாவ து:

வட துருவப் பகுதியை சுற்றி உருவான ஒரு மிகக் குளிர்ந்த காற்று அமைப்பு தெற்கு நோக்கி நகர்ந்தது. இது, 'சைபீரியன் குளிர் அலை' எனப் படுகிறது. கடந்த 17 முதல் இது வடக்கு சவுதியை தாக்கியது.

வழக்கமாக, குளிர்ந்த காற்றுடன் ஈரப் பதம் நிறைந்த காற்று சேரும்போது மழை பெய்யும். ஆனால் வெப்பநிலை பூஜ்யத்திற்கு குறைவாக இருந்ததால், தற்போது பனிப்பொழிகிறது. இவ்வாறு கூறினர்.

துபாயில் கனமழை: விமான சேவை பாதிப்பு

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், துபாயின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. துபாயின் அல் பர்ஷா, கராமா நகரத்தின் சில பகுதிகளிலும், ஷார்ஜாவின் அல் மஜாஸ் பகுதியிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல வாகனங்கள் நீரில் சிக்கி தத்தளிக்கின்றன. இதனால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக எமிரேட்ஸ், ப்ளைடுபாய் உள்ளிட்ட நிறுவனங்கள் பல விமானங்களை ரத்து செய்துள்ளன. பல விமானங்களின் புறப்பாடு தாமதமாகியுள்ளது. அத்தியாவசியமில்லாத பயணங்களை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவசரகால மீட்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.








      Dinamalar
      Follow us