காசா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம்: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்
காசா பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம்: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம்
ADDED : மார் 25, 2024 09:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நியூயார்க்: காசா பகுதியில் மனிதநேய அடிப்படையில் உடனடியாக போர்நிறுத்தம் வேண்டி , ஐ.நா., பாதுகாப்பு சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு இடையே கடந்தாண்டு அக்டோபரிலிருந்து போர் நடந்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, அங்கு உனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என ஐ.நா., பொது சபையில் ஜோர்டான் வரைவு தீர்மானம் தாக்கல் செய்தது.
இந்நிலையில் வரும் ரமலான் பண்டிகையை கருத்தில் கொண்டு 'காசா பகுதியில் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தீர்மானத்திற்கு ஆதரவாக 14 உறுப்பு நாடுகள் ஆதரவளித்தன.

