தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ஈரானில் தொடங்கியது வெளியேற்றம்; ஆர்மீனியா எல்லையை நோக்கி நகரும் இந்தியர்கள்

ஈரானில் தொடங்கியது வெளியேற்றம்; ஆர்மீனியா எல்லையை நோக்கி நகரும் இந்தியர்கள்

ஈரானில் தொடங்கியது வெளியேற்றம்; ஆர்மீனியா எல்லையை நோக்கி நகரும் இந்தியர்கள்


UPDATED : ஜூன் 17, 2025 07:30 AM

ADDED : ஜூன் 17, 2025 07:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2025 07:30 AM ADDED : ஜூன் 17, 2025 07:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டெஹ்ரான்; ஈரானில் இருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.

ஈரானின் அணுசக்தி திட்டத்தால் அச்சுறுத்தல் என்று கருதிய இஸ்ரேல், அந்நாட்டின் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ் 3 என்ற பெயரில் இஸ்ரேலும் தாக்குதலை வேகப்படுத்தி இருக்கிறது.

தாக்குதல்கள் தீவிரம் அடைந்துள்ளதால் டெஹ்ரானில் இருந்து ஈரான் மக்கள் வெளியேற வேண்டும் என்று அந்நாடும், டெல் அவிவ்வில் இருந்து மக்களும் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேலும் அறிவித்துள்ளன. தாக்குதல் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், டெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந் நிலையில், இஸ்ரேலில் இருந்து இந்திய குடிமகன்களை வெளியேற்றும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த தொடங்கி உள்ளது. ஆர்மீனியா வழியாக இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன.

டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம், ஈரானின் பல்வேறு இடங்களில் உள்ள 100க்கான இந்திய குடிமகன்களில் குறிப்பாக மாணவர்கள் ஆர்மீனியா எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். ஆர்மீனியாவுக்குள் நுழைந்த பின்னர், அவர்கள் அனைவரும் அங்கிருந்து பத்திரமாக இந்தியா அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிகிறது.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் கூறி இருப்பதாவது;

டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம், நிலைமைகளை கண்காணித்து வருகிறது. தூதரக வசதியுடன் மாணவர்கள் ஈரானுக்குள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுகின்றனர். இந்த நடவடிக்கைகள் மேலும் தொடரும்.

இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் கூறி உள்ளது.

ஈரானில் தற்போதுள்ள சூழலில் கிட்டத்தட்ட 10,000க்கும் மேற்பட்ட இந்திய மக்கள் வசிக்கின்றனர். அதே போல இஸ்ரேலில் 26,000 இந்தியர்கள் இருக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us