முடியவே முடியாது... இலக்கை அடையும் வரை போர் நிற்காது: இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்!
முடியவே முடியாது... இலக்கை அடையும் வரை போர் நிற்காது: இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்!
ADDED : செப் 27, 2024 07:36 AM

வாஷிங்டன்: 'ஹிஸ்புல்லா அமைப்பு ஒழிக்கப்படும் வரை இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தும்' என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார்.
லெபனானின் தலைநகரான பெய்ரூட்டின் புறநகர்ப்பகுதியை குறிவைத்து இஸ்ரேலிய விமானப்படை வான்வழித் தாக்குதல் நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர். 15 பேர் பலத்த காயமுற்றனர். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க நெதன்யாகு அமெரிக்கா வந்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
உலகளாவிய போர் நிறுத்த அழைப்புகளை நாங்கள் நிராகரிக்கிறோம். வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்த உள்ளோம். எங்கள் கொள்கை தெளிவாக உள்ளது. நாங்கள் முழு பலத்துடன் ஹிஸ்புல்லாவைத் தொடர்ந்து தாக்கி வருகிறோம்.
இலக்குகள்
ஹிஸ்புல்லா அமைப்பினரின் பதுங்கும் இடங்கள் அனைத்தும் ஒழிக்கப்படும் வரை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தும். நாங்கள் நிறுத்த மாட்டோம். இது எங்கள் கொள்கை யாரும் தவறாக நினைக்க வேண்டாம். இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

