தங்கம் வெல்ல தங்கமான நேரம் வந்தாச்சு! செஸ் ஒலிம்பியாட்டில் சூப்பராக அசத்திய இந்தியா
தங்கம் வெல்ல தங்கமான நேரம் வந்தாச்சு! செஸ் ஒலிம்பியாட்டில் சூப்பராக அசத்திய இந்தியா
UPDATED : செப் 23, 2024 02:28 PM
ADDED : செப் 22, 2024 06:53 AM

புடாபெஸ்ட்; செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி 17 புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளதால் தங்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளன.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட போட்டியில் 9வது சுற்றில் இந்திய அணி கடந்த முறை தங்கம் வென்ற உஸ்பெகிஸ்தானை எதிர்கொண்டது. கடும் போராட்டங்களுக்கு பின்னர் இந்த போட்டி டிராவானது. 8 சுற்றுகளில் வாகை சூடிய இந்தியா முதல் முறையாக டிரா செய்தது.
10வது சுற்றில் இந்தியாவின் அர்ஜூன் எரிகாசி, அமெரிக்காவின் லெனியர் டோமின்குயிசை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த போட்டியில் அர்ஜூன் வெற்றியை தம்வசப்படுத்திக் கொண்டார். இதன் மூலம் இந்திய அணி செஸ் ஒலிம்பியாட் தொடரில் 19 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் சீனா 17 புள்ளிகளுடன் இருக்கிறது.
16 புள்ளிகளுடன் ஸ்லோவேனியா 3வது இடத்தில் இருக்கிறது. இறுதிச்சுற்றான 11வது சுற்றில் இந்தியா தோற்றால் சீனாவும் இந்தியாவும் 19 புள்ளிகளுடன் முதலிடத்தை பகிர்ந்து கொள்ளும். முதலிடம் யாருக்கு என்பது டைபிரேக்கர் மூலம் முடிவு செய்யப்படும். வெற்றியாளர் யார் என்பதை நிர்ணயம் செய்யும் டைபிரேக்கரில் இந்தியா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினால் போட்டியில் முதலிடம் பெறும் வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன.