sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

மீண்டும் நேரடி விமான சேவை இந்தியா - சீனா உடன்பாடு

/

மீண்டும் நேரடி விமான சேவை இந்தியா - சீனா உடன்பாடு

மீண்டும் நேரடி விமான சேவை இந்தியா - சீனா உடன்பாடு

மீண்டும் நேரடி விமான சேவை இந்தியா - சீனா உடன்பாடு


UPDATED : ஜன 28, 2025 12:39 AM

ADDED : ஜன 28, 2025 12:34 AM

Google News

UPDATED : ஜன 28, 2025 12:39 AM ADDED : ஜன 28, 2025 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீஜிங், கைலாஷ் மானோசரவர் யாத்திரையையும், இரு நாடுகளுக்கு இடையிலான நேரடி விமான போக்குவரத்தையும் மீண்டும் துவங்குவது என, இந்தியா - சீனா நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையில் நடந்த பேச்சில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரு நாட்கள் பயணமாக, அண்டை நாடான சீனாவுக்கு சென்ற நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வாங் யியை பீஜிங்கில் நேற்று சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார்.

அப்போது, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறியதாவது:

கிழக்கு லடாக் விவகாரம் தொடர்பாக, சீன அதிபர் ஷீ ஜின்பிங் - இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே கடந்த ஆண்டு அக்டோபரில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இருதரப்பினரும் பல்வேறு விவகாரங்களில், கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும். பரஸ்பர சந்தேகங்களுக்கு பதிலாக, பரஸ்பர புரிதலுக்கு நாம் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். முக்கிய விவகாரங்களில் ஒருவரையொருவர் நம்ப வேண்டும்.

சீனா-- - இந்தியா உறவுகளின் முன்னேற்றம், இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்காகவும், உலகளாவிய தெற்கு நாடுகளின் சட்டப்பூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாப்பதற்கும் உகந்தது.

மேலும், இரு நாடுகளின் அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சி, செழிப்பு ஆகியவற்றுக்கு மிகவும் அவசியமானது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, 2020ல் நிறுத்தப்பட்ட கைலாஷ் மானோசரவர் யாத்திரையை மீண்டும் துவங்குவது என்றும், கொரோனாவால் நிறுத்தப்பட்ட இரு நாடுகளுக்கு இடையிலான நேரடி விமான சேவையை மீண்டும் துவங்குவது என்றும், இருதரப்புக்கும் இடையிலான பேச்சில் முடிவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us