ADDED : மார் 26, 2025 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: இந்தியா - சீனா இடையே பீஜிங் நகரில் நேற்று நடந்த எல்லை விவகாரங்கள் தொடர்பான, சிறப்பு பிரதிநிதிகள் சந்திப்பை, அடுத்த முறை டில்லியில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
பீஜிங்கில் நேற்று நடந்த சிறப்பு பிரதிநிதிகள் கூட்டத்தில், இந்திய தரப்பில் கிழக்காசிய நாடுகளின் விவகாரங்களுக்கான இணை செயலர் கவுரங்கலால் தாஸ் தலைமையிலான குழு பங்கேற்றது.அதுபோல, சீனா தரப்பில், அந்நாட்டின் வெளி விவகாரத்துறையின் எல்லை மற்றும் கடல் விவகார துறையின் தலைமை இயக்குனர் ேஹாங் லியாங் தலைமையிலான குழு பங்கேற்றது.