sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

64 கோடி ஓட்டுகளை இந்தியா ஒரே நாளில் எண்ணி முடித்ததே; உங்களுக்கு மட்டும் ஏன் தாமதம்: எலான் மஸ்க் கேள்வி

/

64 கோடி ஓட்டுகளை இந்தியா ஒரே நாளில் எண்ணி முடித்ததே; உங்களுக்கு மட்டும் ஏன் தாமதம்: எலான் மஸ்க் கேள்வி

64 கோடி ஓட்டுகளை இந்தியா ஒரே நாளில் எண்ணி முடித்ததே; உங்களுக்கு மட்டும் ஏன் தாமதம்: எலான் மஸ்க் கேள்வி

64 கோடி ஓட்டுகளை இந்தியா ஒரே நாளில் எண்ணி முடித்ததே; உங்களுக்கு மட்டும் ஏன் தாமதம்: எலான் மஸ்க் கேள்வி

31


UPDATED : நவ 24, 2024 12:22 PM

ADDED : நவ 24, 2024 08:37 AM

Google News

UPDATED : நவ 24, 2024 12:22 PM ADDED : நவ 24, 2024 08:37 AM

31


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: இந்தியாவில் ஒரே நாளில் 64 கோடி ஓட்டுகளை எண்ணி விட்டார்கள். ஆனால், 16 நாட்கள் ஆகியும் கலிபோர்னியாவில் 1.6 கோடி ஓட்டுகளை இன்னும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என எக்ஸ் சமூகவலைதள உரிமையாளர் எலான் மஸ்க் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கா அதிபர் தேர்தல் நவ.,5ல் நடந்தது. இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். அடுத்தாண்டு அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்க உள்ளார். தனது அமைச்சரவையில் பணியாற்ற கூடியவர்களே தேர்வு செய்து விட்டார்.

இந்நிலையில், கலிபோர்னியா நாட்டிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம் ஆகும். இங்கு 3.9 கோடி மக்கள் வசிக்கின்றனர், இவர்களில் 1.6 கோடி பேர் இந்த மாதம் துவக்கத்தில் நடந்த தேர்தலில் ஓட்டளித்தனர். செனட் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில், மைக்கேல் ஸ்டீல் போட்டியிட்டார். ஜனநாயகக் கட்சி சார்பில், டெரெக் டிரான் போட்டியிட்டார். தற்போது நிலவரப்படி, குடியரசுக் கட்சியின் குடியரசுக் கட்சி டெரெக் டிரான் 480 ஓட்டுக்கள் முன்னிலையில் உள்ளார். தேர்தல் நடந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் வெற்றியாளர் முடிவு செய்யப்படவில்லை. கலிபோர்னியாவில் 3 லட்சம் ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன.

இது குறித்து, எலான் மஸ்க் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர், 'இந்தியாவில் ஒரே நாளில் 64 கோடி ஓட்டுகளை எண்ணி முடிக்கப்பட்டு விட்டன. கலிபோர்னியாவில் இன்னும் எண்ணப்படுகின்றன' என தாமதம் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் ஷெர்லி வெபர் கூறியதாவது: ஓட்டுப்பதிவை மேம்படுத்தவும், மக்கள் ஓட்டளிப்பதை எளிதாக்கவும் தேர்தல் அதிகாரிகள் மெயில் மூலம் ஓட்டளிப்பு முறையை செயல்படுத்தினர்.

இங்கு பெரும்பாலான மக்கள் மெயில் வாயிலாக ஓட்டளித்துள்ளனர். நாங்கள் பெயர் மற்றும் கையொப்பம் சரிபார்க்க வேண்டும். அந்த ஓட்டுச்சீட்டை உண்மையில் அனுப்பியவர் அவர்தானா என்பதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும். இதனால் ஓட்டுக்களை எண்ணி முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. மெயிலில் வரும் ஓட்டுக்களை சரிபார்க்க அதிக நேரம் தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

3 லட்சம் ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன. இதனை எண்ணி முடிப்பதற்கு இன்னும் ஒரு வாரங்கள் ஆகலாம். மொத்தமாக இறுதி முடிவுகள் ஒரு வாரங்களில் அறிவிக்கப்படும் என்கின்றனர் தேர்தல் அதிகாரிகள். முடிவுகளை விரைவாக தெரிவிக்க வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மாநில தேர்தல் அதிகாரிகள் தங்களால் முடிந்தவரை விரைவாக அறிவிக்க முயற்சி செய்வோம் என தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us