ஆப்கனுக்கு 5 ஆம்புலன்ஸ்கள் உதவிக்கரம் நீட்டிய இந்தியா
ஆப்கனுக்கு 5 ஆம்புலன்ஸ்கள் உதவிக்கரம் நீட்டிய இந்தியா
ADDED : டிச 29, 2025 03:00 AM

காபூல்: ஆப்கானிஸ்தானின் மருத்துவ சேவைகளுக்கு பயன்படும் வகையில், ஐந்து ஆம்புலன்ஸ் வாகனங்களை வழங்கி, நம் நாடு மனிதாபிமான அடிப்படையில் உதவியுள்ளது.
சமீபத்தில் நம் நாட்டிற்கு வந்த, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தினார்.
அப்போது, ஆப்கானிஸ்தானுக்கு உதவும் வகையில் 20 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படும் என அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்தார்.
அதன் ஒரு பகுதியாக, ஐந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆப்கானிஸ்தானுக்கு நேற்று வழங்கப்பட்டன. எஞ்சிய 15 ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைவில் அனுப்பி வைக்கப்படும் என நம் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
தன் மருத்துவ தேவைகளுக்காக பாகிஸ்தானை சார்ந்திருப்பதை ஆப்கானிஸ்தான் வெகுவாக குறைத்து வருகிறது.

