அனைவரின் வளர்ச்சியையும் விரும்பும் நாடு இந்தியா : போலந்தில் பிரதமர் உரை
அனைவரின் வளர்ச்சியையும் விரும்பும் நாடு இந்தியா : போலந்தில் பிரதமர் உரை
UPDATED : ஆக 22, 2024 12:26 AM
ADDED : ஆக 21, 2024 11:37 PM

வார்சா: உ,லக நாடுகளுக்கு நட்புறவு நாடாக இந்தியா திகழ்கிறது. தனக்கு கிடைத்த
அனபான வரவேற்பிறகு போலந்து நாட்டு மக்களுககு நன்றி. அனைவருடனு்ம் இணையும்
இந்தியா அனைவரின் வளர்ச்சியையும் விரும்புகிறது. என பிரதமர் மோடி இந்தியர்கள் மத்தியி்ல் உரையாற்றினா்ர.
போலாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, வார்சாவில் உள்ள குட் மஹாராஜா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.
அரசு முறை பயணமாக பிரதமர் போலாந்து, உக்ரைன் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். இன்று ( ஆக.,21) போலாந்தின் தலைகநர் வார்சா சென்றடைந்தார். அங்கு மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வார்சாவில் உள்ள ‛‛ஜாம்ஷாஹிப் மகாராஜா'' நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.
இந்த நினைவிடம், இரண்டாம் உலக போரின் போது அகதிகளாக வந்த போலந்து நாட்டு குழந்தைகளுக்கு குஜராத்தில் ஜாம்ஷாஹிப் வம்சத்தைச் சேர்ந்த திக்விஜய்சிங்ஜி, ரஞ்சித்சிங்ஜி ஆகியோர் அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அவர்களுடன் உரையாடினார். அவர் பேசுககையில் உ,லக நாடுகளுக்கு நட்புறவு நாடாக இந்தியா திகழ்கிறது. தனக்கு கிடைத்த அனபான வரவேற்பிறகு போலந்து நாட்டு மக்களுககு நன்றி. அனைவருடனு்ம் இணையும் இந்தியா அனைவரின் வளர்ச்சியையும் விரும்புகிறது. ஐரோப்பிய யூனியனில் போல்ந்து கபாடி விளையாட்டில் சாம்பியனாக விளங்குகிறது. இந்தியாவும்கபாடி விளையாட்டில் சிறந்து விளங்குகிறது
இந்தியாவில் ஜன் தன் கணககு எண்ணிக்கை50 மில்லியன் ஆக உள்ளது. 20 நகரங்களில் மெட்ரோ சேவை இயங்குகிறது. என்றார். ஏ.ஐ.,தொழில் நுட்பத்தில் இந்தியா 30 முதல் 35 சதவீதம் வளர்ச்சியை கொண்டுள்ளது. ஒரே ராக்கெட்டில் 100 செயற்கை கோளை அனுப்ப தயாராகி வருகிறது. இந்தியா விண்வெளியில் சொந்தமாக ஆய்வுமையம் அமைக்க முயற்சித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுளில் மருத்துவம் படிப்போரின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்து உள்ளது.
உக்ரைன் போரை பற்றி குறி்பபிடுகையில் இப்பகுதியில் நிரந்தர அமைதி நிலவுவதையே இந்தியா விரும்புகிறது. இந்த நேரத்தில் போர் தேவையில்லாதது.போரின் போது இந்திய மாணவர்களுககு போலந்து உதவியது. அதற்கு இந்தியா தலைவணங்குகிறது. என்றார்.

