sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பாகிஸ்தானை விட காஷ்மீரில் ஜனநாயகம் வலிமையாக உள்ளது: இந்தியா பதிலடி

/

பாகிஸ்தானை விட காஷ்மீரில் ஜனநாயகம் வலிமையாக உள்ளது: இந்தியா பதிலடி

பாகிஸ்தானை விட காஷ்மீரில் ஜனநாயகம் வலிமையாக உள்ளது: இந்தியா பதிலடி

பாகிஸ்தானை விட காஷ்மீரில் ஜனநாயகம் வலிமையாக உள்ளது: இந்தியா பதிலடி

3


ADDED : பிப் 19, 2025 11:04 AM

Google News

ADDED : பிப் 19, 2025 11:04 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐக்கிய நாடுகள்: '' பாகிஸ்தானை விட காஷ்மீரில் ஜனநாயகம் வலிமையாகவும், துடிப்பாகவும் உள்ளது'' என, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவிற்கான நிரந்தர தூதர் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையில் சீர்திருத்தம், பன்முகத்தன்மை, மற்றும் சர்வதேச நிர்வாகத்தை மேம்படுத்துவது தொடர்பான கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர் ஜம்மு காஷ்மீர் குறித்த விவகாரத்தை எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்து இந்தியாவிற்கான நிரந்தர தூதர் பர்வதனேனி ஹரிஷ் கூறியதாவது: இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டு இருந்தார். காஷ்மீர் எப்போதும் இந்தியாவிடம் இருந்து பிரிக்க முடியாத பகுதியாகவே இருக்கும் என்பதை அவருக்கு நினைவுபடுத்துகிறேன். பாகிஸ்தான் பரப்பும் பொய் பிரசாரம் எப்போதும் உண்மையான நிலையை மாற்றிவிடாது. காஷ்மீர் மாநிலத்தில் தங்கள் அரசைத் தேர்வு செய்ய ஏராளமான மக்கள் தங்களது ஓட்டினை பதிவு செய்துள்ளனர்.காஷ்மீர் மக்கள் தங்களது விருப்பத்தை தெளிவாகவும்,உரக்கவும் சொல்லி உள்ளனர். பாகிஸ்தானைப் போல் அல்லாமல், ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகம் துடிப்பாகவும், வலிமையாகவும் உள்ளது.

பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் உள்ளது. ஆனால், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் முன்னணியில் உள்ளது போல் காட்டிக் கொள்வது அந்நாட்டின் முரண்பாட்டினைக் காட்டுகிறது. இந்நாடு தூண்டிவிடும் பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டு உள்ளது. பயங்கரவாதத்தின் வடிவம், வகை மற்றும் நோக்கம் எதுவாக இருந்தாலும் அதனை நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதத்தை எந்த அரசியலும் நியாயப்படுத்த முடியாது. ஐ.நா.,வால் நல்ல மற்றும் கெட்ட பயங்கரவாதத்திற்கு இடையே எந்த வேறுபாட்டையும் காட்ட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

நிரந்தர உறுப்பினர் பதவி


மேலும் அவர் பேசியதாவது: உலகளாவிய பிரச்னைகளுக்கு ஐ.நா.,வின் செயல்பாடுகள் குறித்து கவலை எழுந்துள்ள நிலையில், அதனை சீர்திருத்துவது என்பது கட்டாயமாகிறது. எனவே ஐ.நா., பாதுகாப்பு சபையை விரிவுபடுத்துவதுடன், அதில் இந்தியாவிற்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க வேண்டும்.

குறுகிய நோக்கம் கொண்டவர்களே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இச்சபையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இச்சபையின் அசல் கட்டமைப்புகள் மற்றும் விதிமுறைகள் வரலாற்றில் வித்தியாசமான காலகட்டத்தை குறிக்கின்றன. நமது உலகம் மாறிவிட்டது. மேலும், ஐ.நா., காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us