ADDED : டிச 26, 2024 05:50 AM

மெல்போர்ன்: இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் நான்காவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட 'பார்டர் கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் (பெர்த்) இந்தியா, அடுத்து ஆஸ்திரேலியா (அடிலெய்டு) வெற்றி பெற்றன. மூன்றாவது டெஸ்ட் (பிரிஸ்பேன்) டிரா ஆனது. தொடர் 1-1 என சமனில் உள்ள நிலையில் இரு அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் இன்று மெல்போர்னில், 'பாக்சிங் டே' போட்டியாக துவங்கியது.
கில் 'அவுட்'
இந்திய அணியில் ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு தொடர்களில் தொடர்ந்து சொதப்பி வரும் சுப்மன் கில் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, வாஷிங்டன் சுந்தருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில், சாம் கொன்ஸ்டாஸ் அறிமுக வீரராக களமிறங்கி உள்ளார்.
இந்திய '11'
* ஜெய்ஸ்வால்
* கே.எல்.ராகுல்
* ரோகித் சர்மா (கேப்டன்'
* விராத் கோலி
* ரிஷப் பண்ட் (கீப்பர்)
* ரவீந்திர ஜடேஜா
* நிதீஷ் குமார் ரெட்டி
* வாஷிங்டன் சுந்தர்
* பும்ரா
* சிராஜ்
* ஆகாஷ் தீப்

