sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்திய வம்சாவளி சந்திரிகாவுக்கு கிராமி விருது

/

இந்திய வம்சாவளி சந்திரிகாவுக்கு கிராமி விருது

இந்திய வம்சாவளி சந்திரிகாவுக்கு கிராமி விருது

இந்திய வம்சாவளி சந்திரிகாவுக்கு கிராமி விருது

1


UPDATED : பிப் 03, 2025 12:28 PM

ADDED : பிப் 03, 2025 10:56 AM

Google News

UPDATED : பிப் 03, 2025 12:28 PM ADDED : பிப் 03, 2025 10:56 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லாஸ் ஏஞ்சல்ஸ்: 67வது கிராமி விருது வழங்கும் விழாவில் சிறந்த ஆல்பத்திற்காக பாடகி பியான்ஸூக்கு விருது வழங்கப்பட்டது.

இசையில் சிறந்து விளங்கும் இசைக்கலைஞர்களை பெருமைப்படுத்தும் விதமாக, கிராமி விருது அமெரிக்காவில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 67வது கிராமி விருது விழா மற்றும் கலிபோர்னியாவில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி லாஸ் ஏஞ்சலில் நடந்து வருகிறது.

மொத்தம் 94 பிரிவுகளுக்கான வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சிறந்த நாட்டுப்புற ஆல்பமாக பியான்ஸின் 'கவ்பாய் கார்ட்டர்' தேர்வானது. 11 பிரிவுகளில் பெயான்ஸ் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 'Not Like Us' பாடல் மூன்று விருதுகளை வென்றது.

இந்திய வம்சாவளிக்கு விருது

அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான சந்திரிகா டன்டான், படகராகவும், தொழிலதிபராகவும் இருந்து வருகிறார். இவரது திரிவேணி என்ற ஆல்பம், New Age, Ambient or Chant Album பிரிவில் விருதை வென்றது. இது அவரது 2வது கிராமி விருதாகும். இவர் ஏற்கனவே, 209ல் 'SOUL CALL' என்ற ஆல்பத்திற்காக விருது வென்றிருந்தார்.

ஆண்டின் சிறந்த கிளாசிக்கல் அல்லாத பாடலாசிரியர்: ஏமி ஆலன்

சிறந்த பாப் தனி நிகழ்ச்சி: 'எஸ்பிரெசோ' - சப்ரினா கார்பெண்டர்

சிறந்த பாப் குரல் ஆல்பம்: ஷார்ட் என்' ஸ்வீட் - சப்ரினா கார்பெண்டர்

சிறந்த நடன பாப் ரிக்கார்டிங்: 'வான் டச்' - சார்லி xcx

சிறந்த நடனம்/எலெக்ட்ரானிக் ஆல்பம்: பிராட் (BRAT) — சார்லி xcx

சிறந்த ராக் பெர்ஃபார்மன்ஸ்: நவ் அன்ட் தென் (Now and Then) - தி பீட்டில்ஸ்

சிறந்த ராக் ஆல்பம்: ஹாக்னி டயமண்ட்ஸ் - தி ரோலிங் ஸ்டோன்ஸ்

சிறந்த மாற்று இசை ஆல்பம்: ஆல் பார்ன் ஸ்க்ரீமிங் - செயின்ட் வின்சென்ட்

சிறந்த R&B பெர்ஃபார்மன்ஸ்: 'மேட் ஃபார் மீ (லைவ் ஆன் BET)' - முனி லாங்

சிறந்த ராப் செயல்திறன்: 'நாட் லைக் அஸ்' - கென்ட்ரிக் லாமர்

சிறந்த மெலோடிக் ராப் பெர்ஃபார்மன்ஸ்: “3” — ராப்சோடியில் எரிகா படு

சிறந்த ராப் பாடல்: 'நாட் லைக் அஸ்' - கென்ட்ரிக் லாமர், பாடலாசிரியர் (கென்ட்ரிக் லாமர்)

சிறந்த ராப் ஆல்பம்: அலிகேட்டர் பைட்ஸ் நெவர் ஹீல் - டோச்சி

சிறந்த பாரம்பரிய பாப் குரல் ஆல்பம்: விஷன்ஸ் - நோரா ஜோன்ஸ்

சிறந்த சமகால இன்ஸ்ட்ரூமெண்ட் ஆல்பம்: ப்ளாட் ஆர்மர் - டெய்லர் ஈக்ஸ்டி

சிறந்த நாட்டுப்புற ஆல்பம்: கவ்பாய் கார்ட்டர் (COWBOY CARTER) - பியான்ஸ்

சிறந்த உலகளாவிய இசை நிகழ்ச்சி: “பெம்பா கொலோரா” — ஷீலா இ

சிறந்த ஆப்பிரிக்க இசை நிகழ்ச்சி: 'லவ் மீ ஜெஜே' - டெம்ஸ்






      Dinamalar
      Follow us