போன் வந்தால் உஷார் ! துபாய் வாழ் இந்தியர்களுக்கு எச்சரிக்கை
போன் வந்தால் உஷார் ! துபாய் வாழ் இந்தியர்களுக்கு எச்சரிக்கை
ADDED : செப் 28, 2024 01:26 PM

துபாய்: வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சில் வசிக்கும் இந்தியர்களை குறிவைத்து பலர் பணம் வசூலித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக துபாயில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: துபாயில் வசிக்கும் இந்தியர்களுக்கு தூதரகம் சார்பில் யாரும் போன் செய்வதில்லை. குறுந்தகவலும் அனுப்புவதில்லை. ஆனால் சிலர் தூதரகத்தில் இருந்து பேசுவதாக யாரும் அழைத்தால் விழிப்போடு இருக்கவும்.
குடியுரிமை, குடிபெயர்ந்தோர் விஷயமாக யாரும் பேசினால் நம்ப வேண்டாம். ஒன்டைம் பாஸ்வேர்டு, பாங்க் விவரம், மற்றும் சொந்த விவரங்களை தெரிவிக்க வேண்டாம். யாரும் பணம் கேட்டால் வழங்க வேண்டாம். இது போன்ற மோசடி அழைப்புகள் வந்தால் Pravasi Bharatiya Sahayata Kendra (PBSK) அமைப்புக்கு புகார் தெரிவிக்கலாம். உதவிக்கான தொலைபேசி எண்: 80046342.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.