sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சீனா, அமெரிக்காவை விட வளர்ச்சி அடையும் இந்திய பொருளாதாரம்: ஐ.நா., ஆய்வறிக்கை

/

சீனா, அமெரிக்காவை விட வளர்ச்சி அடையும் இந்திய பொருளாதாரம்: ஐ.நா., ஆய்வறிக்கை

சீனா, அமெரிக்காவை விட வளர்ச்சி அடையும் இந்திய பொருளாதாரம்: ஐ.நா., ஆய்வறிக்கை

சீனா, அமெரிக்காவை விட வளர்ச்சி அடையும் இந்திய பொருளாதாரம்: ஐ.நா., ஆய்வறிக்கை

9


UPDATED : மே 16, 2025 10:43 PM

ADDED : மே 16, 2025 10:35 PM

Google News

UPDATED : மே 16, 2025 10:43 PM ADDED : மே 16, 2025 10:35 PM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூயார்க்: 'நடப்பு நிதியாண்டில் 6.3% வளர்ச்சி விகிதத்துடன், இந்த ஆண்டு உலகில் வேகமாக வளரும் முக்கிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கும்' என்று ஐ.நா., தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* அடுத்த ஆண்டு, இந்தியாவின் பொருளாதாரம் 6.4 சதவீதமாக வளர்ச்சியடையும்.

* சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை விட இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.

* நடப்பு நிதியாண்டில் 6.3% வளர்ச்சி விகிதத்துடன், இந்த ஆண்டு உலகில் வேகமாக வளரும் முக்கிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கும்.

* உலக அளவில், நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. உலகளவில் அரசியல் நிச்சயமற்ற தன்மை, வர்த்தகப் பதற்றங்கள் அதிகரித்து வருவதால், உலகப் பொருளாதாரம் ஒரு ஆபத்தான கட்டத்தில் உள்ளது.

* மற்ற பெரிய பொருளாதாரங்களுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருகிறது.

* சீனா 4.6 சதவீதமும், அமெரிக்கா 1.6 சதவீதமும், ஐரோப்பிய ஒன்றியம் ஒரு சதவீதமும், ஜப்பான் வெறும் 0.7 சதவீதமும் மட்டுமே வளர்ச்சி அடையும்.

* பணவீக்கம் 4.9 சதவீதத்தில் இருந்து, நடப்பாண்டில் 4.3 சதவீதமாக குறைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த மாதம், சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்தியாவின் பொருளாதாரம் இந்த ஆண்டு 6.2% ஆகவும், அடுத்த ஆண்டு 6.3% ஆகவும் வளரும் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us