கஜகஸ்தானில் சீன அமைச்சரை சந்தித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
கஜகஸ்தானில் சீன அமைச்சரை சந்தித்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
ADDED : ஜூலை 04, 2024 11:57 AM

அஸ்தானா: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவில் தொடர் விரிசல்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று(ஜூலை 04) கஜகஸ்தானில் சீன அமைச்சர் வாங் யி- யை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார்.
கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 24வது உச்சி மாநாடு, நேற்று(ஜூலை 03) துவங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார்.
இன்று(ஜூலை 04) ஜெய்சங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்யி- யை சந்தித்தார்.
இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்னை நீடித்து வரும் நிலையில், இரு நாட்டு தலைவர்களும் நேரில் சந்தித்துள்ளனர்.
இருவரும் புகைப்படம் எடுப்பதற்கு முன், கைகுலுக்கிக் கொண்டனர். அப்போது, இரு நாட்டு தலைவர்களும் எல்லை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது குறித்து சிறிது நேரம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.