அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்: மனைவி, உறவினர்கள் 3 பேரை சுட்டுக்கொன்ற இந்தியர் கைது
அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்: மனைவி, உறவினர்கள் 3 பேரை சுட்டுக்கொன்ற இந்தியர் கைது
UPDATED : ஜன 24, 2026 11:43 AM
ADDED : ஜன 24, 2026 11:41 AM

வாஷிங்டன்: அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர் விஜயகுமார், 51, குடும்பத் தகராறில் தன் மனைவி மற்றும் உறவினர்கள் 3 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் ஜார்ஜியா மாநிலத்தில் இந்தியர் விஜயகுமார்,51 மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர் குடும்பத் தகராறில் தன் மனைவி மீமு டோக்ரா, 43, உறவினர்கள் கவுரவ் குமார், 33, நிதி சந்தர், 37, ஹரீஷ் சந்தர், 38 ஆகியோரை சுட்டுக்கொன்றார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்த போது விஜய குமாரின் 12 வயது குழந்தை உட்பட மூன்று குழந்தைகள் ஒரு அலமாரியில் ஒளிந்து கொண்டு துயரத்தில் இருந்து தப்பியது விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து அட்லாண்டாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
குடும்ப தகராறு காரணமாக நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் நாங்கள் மிகவும் வருத்தம் அடைந்தோம். துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

