நியூயார்க் நகர மேயராக பதவியேற்றார் வம்சாவளி இந்தியர் மம்தானி
நியூயார்க் நகர மேயராக பதவியேற்றார் வம்சாவளி இந்தியர் மம்தானி
UPDATED : ஜன 01, 2026 05:34 PM
ADDED : ஜன 01, 2026 04:59 PM

வாஷிங்டன்: நியூயார்க் நகரின் மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மம்தானி, குர்ஆன் மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்றுக் கொண்டார்.
அமெரிக்காவில் மிக முக்கியமான பிரபலமான நகரம் தான் நியூயார்க். இந்த நகரத்தின் மேயராக இருந்த ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எரிக் ஆடம்ஸ் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் நடந்த மேயர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார்.
அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக இஸ்லாமியர் ஒருவர் நியூயார்க் நகர மேயரானார் என்ற வரலாறு படைத்த மம்தானி இன்று அந்நகரில் கைவிடப்பட்ட வரலாற்று சிறப்புடைய பழைய சிட்டி ஹால் சுரங்கப் பாதை ரயில் நிலையத்தில் மேயராகப் பதவியேற்றார். அவர் குர்ஆன் மீது சத்தியப் பிரமாணம் செய்து பதவியேற்று கொண்டார்.
பாக்கியம்
பதவி ஏற்று கொண்ட, பிறகு மம்தானி பேசுகையில், நியூயார்க் நகரின் மேயராகப் பதவியேற்பது வாழ்நாள் மரியாதையாகவும், பாக்கியமாகவும் கருதுகிறேன். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. பழைய சுரங்கப்பாதை நிலையம் நமது நகரத்தின் உயிர்ச்சக்தி, சுகாதாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான பொதுப் போக்குவரத்தின் முக்கியத்துவத்திற்கு ஒரு சான்றாகும். இவ்வாறு அவர் கூறினார்.
பெற்றோர்
மம்தானி, உகாண்டா நாட்டின் கம்பாலா நகரில் பிறந்தவர். இவர், 5 வயது சிறுவனாக இருந்தபோது, அவரது பெற்றோர், வம்சாவளி இந்தியர்களான சினிமா இயக்குனர் மீரா நாயர், மஹ்மூத் மம்தானி ஆகியோர், அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தனர்.

