ADDED : செப் 01, 2025 12:48 AM

ஒட்டாவா: கனடா காவல் துறையி ன் முதல் இந்திய வம்சாவளி தலைவரான டெல் மனக், 35 ஆண்டுகால சேவைக்குப் பின் ஓய்வு பெற்றார்.
கனடாவின் முதல் இந்திய வம்சாவளி காவல் துறை தலைவர் டெல் மனக். வான்கூவரில் பிறந்து வளர்ந்த இவர், கடந்த 1990ல் அந்நகர காவல் துறையில் பணிக்கு சேர்ந்தார். அதன் பின் விக்டோரியா நகர காவல் துறையில் சேர்ந்து சாதனை படைத்தார். ஏனெனில், அதன் 168 ஆண்டுகால வரலாற்றில், வெள்ளையர் அல்லாத முதல் அதிகாரி இவர்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பல்வேறு போலீஸ் பிரிவுகளில், 35 ஆண்டுகளாக பணியாற்றிய பின், சமீபத்தில் பணி ஓய்வு பெற்றார்.
டெல் மனக், கடந்த 2017ல் விக்டோரியா போலீஸ் பிரிவின் தலைவராக பதவி உயர்வு பெற்றார். இதன் மூலம் அந்நாட்டின் காவல் துறை தலைவர் பதவிக்கு உயர்ந்த முதல் இந்திய வம்சாவளி என்ற பெருமையை பெற்றார். மனக்கை கவுரவிக்கும் விதமாக விக்டோரியா நகரம், அவர் ஓய்வு பெற்ற நாளான ஆகஸ்ட் 27ம் தேதியை 'டெல் மனக் தினம்' என அறிவித்துள்ளது.