அமெரிக்காவில் குடும்பத்தினர் மீது தீ வைக்க முயற்சி; இந்திய வம்சாவளி மாணவர் கைது
அமெரிக்காவில் குடும்பத்தினர் மீது தீ வைக்க முயற்சி; இந்திய வம்சாவளி மாணவர் கைது
ADDED : டிச 27, 2025 06:10 PM

வாஷிங்டன்: தீ வைப்பு, பயங்கரவாத மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், இந்திய வம்சாவளி மாணவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர், இந்திய வம்சாவளி மாணவர் மனோஜ் சாய் லெல்லா, 22. டெக்சாஸ் பல்கலையில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான படிப்பில் இறுதியாண்டு பயின்று வருகிறார்.
கடந்த 22ம் தேதி, மனோஜ் தன் குடும்ப உறுப்பினர்களை கொல்லப் போவதாக மிரட்டியுள்ளார். இதற்கு சில நாட்களுக்கு முன், தன் வீட்டை தீ வைக்க முயன்றதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.
மனோஜ் கடுமையான மனநல பாதிப்புக்கு உள்ளாகியிருந்ததாகவும், அதன் காரணமாகவே அவர் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், மனோஜை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். ஜாமின் வழங்க, 86 லட்சம் ரூபாய் பிணைத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

