கயிறு இழுக்கும் போட்டியில் சீனாவை மண்ணைக் கவ்வ வைத்த இந்திய வீரர்கள்
கயிறு இழுக்கும் போட்டியில் சீனாவை மண்ணைக் கவ்வ வைத்த இந்திய வீரர்கள்
ADDED : மே 29, 2024 03:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கார்மூம்: சூடானில் ஐ.நா.,வின் அமைதிப்படையில் ஈடுபட்டுள்ள இந்திய சீன வீரர்கள் இடையே கயிறு இழுக்கும் போட்டி நடந்தது. இதில், இந்திய வீரர்கள் வெற்றி பெற்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த வீரர்கள் வெற்றி பெற கடுமையான முயற்சி செய்கின்றன. நட்பு ரீதியில் நடந்த போட்டியில் உடல் வலிமை மற்றும் ஒரே அணியாக செயல்பட்ட இந்திய வீரர்கள் வெற்றியை உறுதி செய்தனர். இரு அணி வீரர்களையும், அந்தந்த நாட்டின் ஆதரவாளர்கள் உற்சாகப்படுத்தினர். இந்திய வீரர்கள் வெற்றி பெற்றதும், ' இந்தியா.. இந்தியா...' உற்சாகமாக முழங்கினர். வைரலாகும் இந்த வீடியோவின் உறுதித்தன்மையை இந்திய ராணுவமும் உறுதி செய்துள்ளது.