உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 19, 2026 01:55 AM
அ நிறம் | அளவு
வாஷிங்டன்: அமெரிக்காவின் சிகாகோ அருகே உள்ள இண்டியானா மாகாணத்தின் லேக் கவுண்டியில் சாலை விபத்து ஒன்று நடந்தது. இவ்விபத்தில், நம் நாட்டின் தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த நவ்யா கடுசு என்ற மாணவி பலியானார்.
போலீசார் கூறியதாவது:
ப ழுதடைந்த வாகனம் ஒன்றிற்கு பின்னால் நவ்யா பயணித்த மினி வேன் சென்று கொண்டிருந்தது. இவ்வாகனத்துக்கு பின்னால் வந்த வாகனம் முந்தி செல்ல முயன்றபோது, மினி வேனின் மீது பலமாக மோதியது. இதனால் நிலை தடுமாறிய மினி வேன் அருகில் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்ததில் நவ்யா கடுசு சம்ப இடத்திலேயே பலியானார்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
