sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமெரிக்காவில் இந்திய மாணவர் மாயம்: குடும்பத்தினர் கவலை

/

அமெரிக்காவில் இந்திய மாணவர் மாயம்: குடும்பத்தினர் கவலை

அமெரிக்காவில் இந்திய மாணவர் மாயம்: குடும்பத்தினர் கவலை

அமெரிக்காவில் இந்திய மாணவர் மாயம்: குடும்பத்தினர் கவலை

5


ADDED : பிப் 14, 2026 01:48 PM

Google News

5

ADDED : பிப் 14, 2026 01:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: அமெரிக்காவில் படித்து வந்த இந்திய மாணவர், கடந்த நான்கு நாட்களாக மாயமானார். அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

கர்நாடகாவை சேர்ந்தவர் சாகேத் ஸ்ரீனிவாசையா(22). சென்னை ஐஐடியில் பட்டம் முடித்த இவர், மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். கலிபோர்னியாவின் பெர்க்லே பல்கலையில் அவர் வேதியியல் மற்றும் பயோ மாலிகுலர் பொறியியல் பிரிவில் மேற்படிப்பு படித்தார். அத்துடன் புதிய தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டி வந்தார்.

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக அவரை காணவில்லை. குடும்பத்தினர் மற்றும் நண்பர்களால் அவரை, கடந்த பிப்.,10 முதல் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடைசியாக, இவர், பெர்கலேயின் திவிட் வே பகுதியில் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணைத்தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பட்டமேற்படிப்பு படித்து வந்த இந்திய மாணவர் சாகேத் ஸ்ரீனிவசையா காணாமல் போனது கவலையை ஏற்படுத்தி உள்ளது. குடும்பத்தினர் உடனும். மாணவரை கண்டுபிடிக்க உள்ளூர் அதிகாரிகளுடனும் தொடர்பில் உள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us