அமெரிக்காவில் இந்திய வாலிபர் சுட்டுக்கொலை: டிரக் டிரைவர் வெறிச்செயல்
அமெரிக்காவில் இந்திய வாலிபர் சுட்டுக்கொலை: டிரக் டிரைவர் வெறிச்செயல்
ADDED : ஜூலை 21, 2024 01:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன்: அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் 29 வயதான இந்திய வாலிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உ.பி., மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் கவின் தசாவூர். இவர் மெக்சிகோவை சேர்ந்த விவியனா ஜமோரா என்பவை ஜூன் 29ம் தேதி திருமணம் செய்தார். அம்மாகாணத்தின் தெற்கு பகுதியில் உள்ள இண்டி நகரில், காரில் சென்று கொண்டிருந்த கவின் தசாவூர், டிரக்கை முந்தி சென்றார். இதனால், அவருக்கும், டிரக் டிரைவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
காரில் இருந்து இறங்கிச் சென்ற கவின் தசாவூர், டிரக் டிரைவருடன் துப்பாக்கியை காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, டிரக் டிரைவர் சுட்டதில் சம்பவ இடத்திலேயே கவின் தசாவூர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குற்றவாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.