sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஹய்யா ஜாலி., ஐக்கிய அரபு எமிரேட்சில் இனி ' ஜி பே ' பண்ணலாமே !

/

ஹய்யா ஜாலி., ஐக்கிய அரபு எமிரேட்சில் இனி ' ஜி பே ' பண்ணலாமே !

ஹய்யா ஜாலி., ஐக்கிய அரபு எமிரேட்சில் இனி ' ஜி பே ' பண்ணலாமே !

ஹய்யா ஜாலி., ஐக்கிய அரபு எமிரேட்சில் இனி ' ஜி பே ' பண்ணலாமே !

3


UPDATED : ஆக 18, 2024 01:09 PM

ADDED : ஆக 18, 2024 11:20 AM

Google News

UPDATED : ஆக 18, 2024 01:09 PM ADDED : ஆக 18, 2024 11:20 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அபுதாபி: சவுதி, துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் அங்குள்ள பிரபல ஷாப்பிங் மால்களில் ஜி பே, போன் பே, ரூபே கார்டு மூலம் பணம் அனுப்பி கொள்ளும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியான செய்தி


பொதுவாக ஒரு நாட்டவர்கள் மற்றொறு நாட்டுக்கு செல்லும் போது அந்தந்த நாட்டின் கரன்சியை மாற்றி எடுத்து செல்வோம். இதன் மூலம் நாம் பர்சேஸ் செய்வது வழக்கம். தற்போது நவீன டிஜிட்டல் தொழிநுட்பம் உதவியுடன் Unified Payments Interface (UPI) மூலம் போன் வழியாக ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பி வருகிறோம். எந்தவொரு வங்கி கணக்கிற்கும் பணத்தை அனுப்பிவிட முடிகிறது. இது இந்தியாவில் உள்ளவர்கள் உள்நாட்டில் மட்டுமே பண பரிவர்த்தணை செய்ய முடியும். வெளிநாடுகளில் இதுவரை பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இது தற்போது வளைகுடா நாடுகளில் நிறைவேற துவங்கியிருப்பது இந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.

கடந்த பிப்ரவரி மாதம் அபுதாபி சென்ற பிரதமர் மோடி , யு.ஏ.இ. அதிபர் ஷே க் முகம்மது பின் ஷயாத் அல்நஹயான், ஆகியோர் இணைந்து அந்நாட்டில் ரூபே கார்டு மூலம் பண பரிமாற்றம் செய்யும் நிகழ்வை துவக்கி வைத்தனர். இது உடனடியாக துபாயை மையமாக கொண்டு செயல்படும் மஷ்ராஹ் வங்கி மற்றும் அல்மயா சூப்பர்மார்கெட்டில் நடைமுறைக்கு வந்தது. இது தற்போது உலகில் பல்வேறு கிளைகளை கொண்ட பெரும் ஷாப்பிங் மால் நிறுவனமான லூலு குரூப் இன்டர்நேஷணல், ஐக்கிய அரபு எமிரேட்டில் யு.பி.ஐ., மூலம் பண பரிவர்த்தனை திட்டத்தை துவக்கியிருக்கிறது. அங்குள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரி அமர்நாத் துவக்கி வைத்தார். போன் பே, ஜிபே, ரூபே கார்டு, கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்தும் என பயன்படுத்தி பண பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

லூலு குரூப் இன்டர்நேஷனல் வளைகுடா கூட்டமைப்பு நாடுளான பஹ்ரைன், குவைத், கத்தார், ஓமன், சவுதிஅரேபியா, ஐக்கிய அரபு எமிரேட் உள்ளிட்ட பகுதிகளில் 200 Hypermarkets நடத்தி வருகிறது. இந்தியாவில் திருவனந்தபுரம், பாலக்காடு, கொச்சி, கோவை, பெங்களூரூ, லக்னோ, ஐதராபாத், என 7 நகரங்களிலும், மலேசியாவில் 4 , இந்தோனேஷியாவில் 4 சூப்பர்மார்கெட் நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் அரபு நாடுகளுக்கு தோராயமாக கோடிக்கணக்கானவர்கள் வந்து செல்கின்றனர். தற்போதைய டிஜிட்டல் பேமென்ட் இந்தியர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். ஹாயா, ஜாலியா ஷாப்பிங் பண்ணலாம்.

பின் குறிப்பு:

ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்த லூலு நிறுவனம் முழு அளவில் டிஜிட்டல் பேமென்டை ஏற்று கொள்கிறது. ஏனைய வளைகுடா நாடுகளில் ஏனைய வர்த்தக நிறுவனங்கள் இது போன்ற பே பண்ணும் ஆப்ஷன் இருக்கிறதா என்று முதலில் கேட்டறிந்து கொள்வது நல்லது. இந்த கார்டு, எந்த வங்கி இது ஏற்று கொள்ளப்படுமா? என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இது தாங்க சூப்பர் !

பன்னாட்டு கூட்டு நிறுவனமான லூலு குரூப் இன்டர்நேஷணல் நிறுவனர் யூசூப்அலி கேரள மாநிலம் திரிசூர் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமமான நாட்டிகாவை சேர்ந்தவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.








      Dinamalar
      Follow us