தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/யுஏஇயில் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: தூதரகம் அறிவுரை

யுஏஇயில் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: தூதரகம் அறிவுரை

யுஏஇயில் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: தூதரகம் அறிவுரை


ADDED : மார் 05, 2026 04:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 04:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்தியர்கள் பாதுகாப்புடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அந்த பிராந்தியத்தில் தற்போது நிலவும் சூழல் காரணமாக, அங்கு வசிக்கும் இந்தியர்கள் விழிப்புடனும், அமைதியாகவும் இருக்க வேண்டும். அதிகாரிகள் வெளியிடும் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

2.தற்போது நிலவும் சூழல் காரணமாக, வான்வெளி மூடப்பட்டுள்ளதால், வழக்கமான விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதேநேரத்தில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிறுவனங்களின் சிறப்பு விமானங்கள் அனுமதி பெற்று பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு பயணம் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

3. விசா காலாவதியாகி பிப்.,28 க்கு பிறகு ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து கிளம்ப முடியாதவர்களும், கூடுதல் நாட்கள் தங்குவதற்கான அபராதத்தை ரத்து செய்வதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மற்ற காரணங்களால் திரும்ப முடியாதவர்களின் அபராதமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

4.அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் துபாயில் உள்ள தூதரக அலுவலகங்களில் விசா, பாஸ்போர்ட் மற்றும் தூதரக உதவி போன்ற சேவைகள் வழக்கம் போல் செயல்படுகின்றன.

5. எந்த சந்தேகங்கள் மற்றும் புகார்கள் குறித்து ஐக்கிய அரபு எமிரேட்சில் வசிக்கும் இந்தியர்கள், 24 மணி நேரமும் செயல்படும் 800-46342 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

+971 543090571 என்ற வாட்ஸ் அப் எண் வாயிலாகவும் உதவி கோரலாம். pbsk.dubai@mea.gov.in மற்றும் ca.abudhabi@mea.gov.in போன்ற இமெயில்களையும் பயன்படுத்தலாம்.

7. தற்போதைய நிலவரம் மற்றும் அறிவுரைகள் குறித்து இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக இந்திய தூதரகம் அறக்கைகளை தொடர்ந்து வெளியிடும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us