‛டைம்‛ இதழ் செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் இந்தியர்கள் பெயர்
‛டைம்‛ இதழ் செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் இந்தியர்கள் பெயர்
ADDED : ஏப் 17, 2024 10:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன்: ‛டைம் ‛ இதழ் வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டின் மிகவும் செல்வாக்குமிக்க 100 பிரபலங்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‛டைம்' இதழ் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மிகவும் செல்வாக்குமிக்கவர்களின் 100 பேர் பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. இந்தாண்டிற்கான 100 பேர் பட்டியலை ‛டைம்‛ இதழ் வெளியிட்டுள்ளது.
இதில் மல்யுத்த ஒலிம்பிக் வீராங்கனை சாக்சிமாலிக், பாலிவுட் நடிகை ஆலியாபட், பாலிவுட் நடிகர்,இயக்குனர் தேவ் பட்டேல், மைக்ரோசாப்ட் சி.இ.ஓ., சத்ய நாதெல்லா, உலக வங்கி தலைவர் அஜெய்பங்கா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

