இந்தியாவுக்கான சீன தூதர் பொறுப்பேற்பு: எல்லை பிரச்னை பேச்சு வேகமெடுக்குமா?
இந்தியாவுக்கான சீன தூதர் பொறுப்பேற்பு: எல்லை பிரச்னை பேச்சு வேகமெடுக்குமா?
UPDATED : மே 10, 2024 03:47 PM
ADDED : மே 10, 2024 03:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: இந்தியாவுக்கான சீன தூதர் ஷூபியூஹாங் இன்று (மே-10) ல் டில்லி வந்து பொறுப்பேற்றார். டில்லி வந்த இவரை இந்திய வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகள் வரவேற்றனர். இவரது வருகையால் நீண்ட கால எல்லை பிரச்னை பேச்சு வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷூபியூஹாங் சீனாவின் வெளியுறவு, நிதி துறை துணை அமைச்சராகவும், ஆப்கானிஸ்தான் , ரோமானியா நாட்டின் சீன தூதராகவும், பணியாற்றி உள்ளார் .
இந்தியா- சீனா இடையிலான லடாக் விவகாரம் தொடர்பான பல கட்ட பேச்சு நடந்துள்ளது. தற்போது புதிய தூதரால் மீண்டும் வேகமெடுக்கலாம் என தெரிகிறது.