ஒலிம்பிக் ஹாக்கி: இந்தியாவின் பைனல் கனவு தகர்ந்தது
ஒலிம்பிக் ஹாக்கி: இந்தியாவின் பைனல் கனவு தகர்ந்தது
ADDED : ஆக 07, 2024 12:24 AM

பாரிஸ்: ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதியில் இந்தியா, ஜெர்மனியுடன் போராடி தோற்றது. இதையடுத்து பைனல் கனவு தகர்ந்தது.
ஒலிம்பிக் ஹாக்கியில் 12 அணிகள் பங்கேற்கின்றன. இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, முதலில் போட்டிகள் லீக் முறையில் நடந்தன.
உலகத்தரவரிசையில் 'நம்பர்-7' இடத்திலுள்ள இந்திய அணி, லீக் சுற்றில் 'பி' பிரிவில் இடம் பெற்றது. 3 வெற்றி, 1 'டிரா', 1 தோல்வியுடன் காலிறுதிக்குள் நுழைந்தது. இதில் உலகின் 'நம்பர்-2' அணியான இங்கிலாந்தை 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் வீழ்த்தி, அரையிறுதிக்குள் நுழைந்தது. அரையிறுதியில் இந்திய அணி, 'நம்பர்-5' இடத்திலுள்ள ஜெர்மனியை எதிர்கொண்டது.
இதில் 2-3 கோல் கணக்கில் ஜெர்மனியுடன் போராடி தோற்றது. இதன் மூலம் இந்தியாவின் பைனல் கனவு தகர்ந்தது. வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில், இந்திய அணி ஸ்பெயின் அணியை சந்திக்க உள்ளது. இந்த போட்டி, வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது.