sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

குற்றவாளிகள் தப்பிக்க லஞ்சம்; 3 நீதிபதிகளுக்கு காப்பு

/

குற்றவாளிகள் தப்பிக்க லஞ்சம்; 3 நீதிபதிகளுக்கு காப்பு

குற்றவாளிகள் தப்பிக்க லஞ்சம்; 3 நீதிபதிகளுக்கு காப்பு

குற்றவாளிகள் தப்பிக்க லஞ்சம்; 3 நீதிபதிகளுக்கு காப்பு

29


ADDED : ஏப் 14, 2025 01:11 PM

Google News

ADDED : ஏப் 14, 2025 01:11 PM

29


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜகர்ட்டா: குற்றவாளிகளை வழக்கில் இருந்து தப்பிக்க உதவிய நீதிபதிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தோனேஷியாவில் இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.

இங்குள்ள வில்மர் குரூப், முஷிம்மாஸ் குரூப், பெர்மதாகியாஜூ என்ற 3 நிறுவனங்கள் பாமாயில் தயாரிக்கும் ஆலைகள் நடத்தி வருகின்றன. கடந்த 2022 ல் ஏற்றுமதி செய்வதில் பல முறைகேடுகள் செய்ததாக குற்ற்சாட்டு எழுந்தது.

இந்த வழக்குகள் இந்தோனேஷியா ஜகர்ட்டா கோர்ட்டில் நடந்தது. 3 நீதிபதிகள் விசாரித்தனர். தீர்ப்பில் 3 நிறுவனங்களும் குற்றம் புரியவில்லை என குற்றவாளிகளை விடுவித்தனர்.

இதில் புலனாய்வு நிறுவனங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. நீதிபதிகள் 3 பேரும் ஒரு வக்கீல் மூலம் லஞ்சம் ஒருவர் 60 பில்லியன் ரூபையா ( இந்திய மதிப்பில் 30 கோடியே 73 லட்சத்து 64 ஆயிரம் ), மற்ற நீதிபதிகள் 2 பேர் ஒன்பது கோடி வரை லஞ்சம் பெற்றது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து விசாரணை அதிகாரிகள் தெற்கு ஜகர்ட்டா மாவட்ட கோர்ட் தலைமை நீதிபதி முஹம்மது ஹாரீப் உள்பட 3 நீதிபதிகளை கைது செய்தனர். இத்தகவலை அரசு அட்டர்னி ஜெனரல் அலுவலக செய்தி தொடர்பாளர் ஹா்லி ஸ்ரீஹர் உறுதி செய்தார்.






      Dinamalar
      Follow us