UPDATED : நவ 28, 2025 06:21 AM
ADDED : நவ 28, 2025 06:04 AM

சுமத்ரா: இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 என்ற அளவில் பதிவாகியிருந்ததாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் சுமத்ரா தீவின் வடக்கே உள்ள ஆச்சே மாகாணத்திற்கு அருகில், நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, 6.6 ரிக்டராக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம், 10 கி.மீ., ஆழத்தில் இருந்தாக கூறப்படுகிறது.
இந்தோனேஷியா, பசிபிக் நெருப்பு வளையம் என்ற புவியியல் மண்டலத்தில் அமைந்துள்ளதால், உலகின் நிலநடுக்கங்களில் 90 சதவீதம் இந்த பகுதியில்தான் நிகழ்கின்றன. கடந்த 30 நாட்களில் மட்டும், 1,400 முறை இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில், பல சிறிய பின் அதிர்வுகளும், மனிதர்களால் உணர முடியாதவையும் அடங்கும் என, தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

