வலிமை பெறுகிறது இந்திய கடற்படை: ஐ.என்.எஸ்., துஷில் டிச.,9ல் இணைப்பு
வலிமை பெறுகிறது இந்திய கடற்படை: ஐ.என்.எஸ்., துஷில் டிச.,9ல் இணைப்பு
ADDED : டிச 06, 2024 05:17 PM

மாஸ்கோ: ரஷ்யாவில் கட்டப்பட்ட ஐ.என்.எஸ்., துஷில் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் சேர்க்கப்படுகிறது.
இந்த போர்க்கப்பல்களை கட்டுவதற்கு 2016ல் ஒப்பந்தம் போடப்பட்டது. துஷில் என்றால் சமஸ்கிருதத்தில் பாதுகாவலன் என்று அர்த்தம் ஆகும். வரும் 9ம் தேதி முதல் கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ள நிலையில், இரண்டாவது போர்க்கப்பல், அடுத்தாண்டு துவக்கத்தில் கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. ரஷ்யாவின் கலினின்கிராட் நகரில் 9ம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இரு நாட்டு உயர் அதிகாரிகள் இந்நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
இந்த ஐஎன்எஸ் துஷில் என்பது கிர்விக் போர்க்கப்பலின் மேம்படுத்தப்பட்ட வசதிகள் கொண்டவை ஆகும். இதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட தல்வார் மற்றும் தேக் போர்க்கப்பல்கள் இந்திய கடற்படையில் பயன்பாட்டில் உள்ளன.
125 மீட்டர் நீளம் கொண்ட துஷில் போர்க்கப்பல் 3900 டன் எடையை தாங்கும். எதிரிகளின் ரேடாரில் எளிதாக கண்டுபிடிக்க முடியாது. கடலில் நிலவும் எந்த சூழ்நிலையையும் இக்கப்பல் சமாளிக்கும். இக்கப்பலில் 26 சதவீதம் இந்தியாவில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்திலும், 33 சதவீத அமைப்புகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டவை. பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம், பெல் நிறுவனம், கெல்ட்ரான் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களின் பங்களிப்புகள் உள்ளன.