அடித்து விரட்டியது பிரேசில்; அலறுகிறார் எலான் மஸ்க்; பைத்தியம் தான் முதலீடு செய்யும் என புலம்பல்!
அடித்து விரட்டியது பிரேசில்; அலறுகிறார் எலான் மஸ்க்; பைத்தியம் தான் முதலீடு செய்யும் என புலம்பல்!
UPDATED : செப் 01, 2024 03:45 PM
ADDED : செப் 01, 2024 08:31 AM

வாஷிங்டன்: 'தற்போதைய அரசு நிர்வாகத்தின் கீழ் பிரேசிலில் முதலீடு செய்வது பைத்தியக்காரத்தனமானது' என எக்ஸ் சமூக வலைதள உரிமையாளர் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
'தணிக்கை உத்தரவை எதிர்ப்போம்' என்று கூறி, பிரேசிலில் செயல்பட்ட எக்ஸ் அலுவலகத்தை மொத்தமாக மூடி ஊழியர்களை நீக்கினார் எலான் மஸ்க். அலுவலகம் மூடப்பட்டாலும் பிரேசிலில் எக்ஸ் சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்ததால்,
எக்ஸ் தளத்திற்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
இது தொடர்பாக, பில்லியனர் ஹெட்ஜ் நிதி மேலாளர் பில் அக்மேன் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: பிரேசிலில் எக்ஸ் சமூகவலைதளத்தை மூட உத்தரவிட்டது சட்டவிரோதம். இது பிரேசிலை ஒரு முதலீடு செய்ய முடியாத சந்தையாக மாற்றுவதற்கான வாய்ப்பை உருவாக்கும்.
சீனாவும் இதேபோன்ற செயல்களைச் செய்தது. இது அவர்களின் மதிப்பீட்டில் சரிவுக்கு வழிவகுத்தது. இந்த சட்டவிரோத செயல்களில் இருந்து விரைவில் பின்வாங்காத வரையில் பிரேசிலுக்கும் இதே நிலைதான் ஏற்படும்'.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கோபத்தில் இருக்கிறார் மஸ்க்!
இதற்கு பதில் அளித்து எலான் மஸ்க் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதில், ''தற்போதைய நிர்வாகத்தின் கீழ் பிரேசிலில் முதலீடு செய்வது பைத்தியக்காரத்தனமானது. புதிய தலைமை அமையும் போது அது மாறும் என நம்பலாம்'' என குறிப்பிட்டுள்ளார்.