இரண்டாவது நாளாக ஐ.பி.எல்., ஏலம் விறுவிறுப்பு: ரூ.10 கோடிக்கு புவனேஸ்குமாரை தூக்கிய பெங்களூரு அணி
இரண்டாவது நாளாக ஐ.பி.எல்., ஏலம் விறுவிறுப்பு: ரூ.10 கோடிக்கு புவனேஸ்குமாரை தூக்கிய பெங்களூரு அணி
UPDATED : நவ 25, 2024 05:48 PM
ADDED : நவ 25, 2024 05:43 PM

ஜெட்டா: இரண்டாவது நாளாக ஐ.பி.எல்., ஏலம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்றைய ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியின் புவனேஸ்குமாரை ரூ.10 கோடிக்கு பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.
இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 18வது சீசன், அடுத்த ஆண்டு மார்ச் 14ல் துவங்குகிறது. இதற்கான வீரர்கள் 'மெகா' ஏலம், சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நடக்கிறது. இம்முறை 577 பேர் ஏலத்தில் இடம் பெற்றுள்ளனர். இதில், 204 வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களுக்காக ரூ. 641.5 கோடி செலவிடப்படுகிறது.
முதல் நாளான நேற்று, ஐ.பி.எல்., ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரரானார் ரிஷாப் பன்ட். இவரை ரூ. 27.00 கோடிக்கு லக்னோ அணி வாங்கியது. மற்றொரு இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், ரூ. 26.75 கோடிக்கு பஞ்சாப் அணி ஒப்பந்தம் செய்தது.
இரண்டாவது நாளாக ஐ.பி.எல்., ஏலம் தொடர்ந்து நடந்தது.
மேற்கு இந்திய அணி வீரர் ரோவ்மென் பாவெலை ரூ.2 கோடிக்கு கோல்கட்டா அணியும்
தென் ஆப்ரிக்காவின் டு பிளசியை ரூ.2 கோடிக்கு டில்லி அணியும்
இந்திய அணியின் வாஷிங்டன் சுந்தரை ரூ.3.2 கோடிக்கு குஜராத் அணியும்
இங்கிலாந்தின் சாம் கரன்னை ரூ.2.40 கோடிக்கு சென்னை அணியும்
தென் ஆப்ரிக்காவின் மார்கோ ஜென்சனை ரூ.7 கோடிக்கு பஞ்சாப் அணியும்
இந்தியஅணியின் குருணால் பாண்ட்யா ரூ.5.75 கோடிக்கு பெங்களூரு அணியும்
இந்திய அணியின் நிதிஷ் ராணாவை ரூ.4.20 கோடிக்கு ராஜஸ்தான் அணியும்
தென் ஆப்ரிக்காவின் ரயான் ரிக்கெல்டன் ரூ. 1 கோடிக்கு மும்பை அணியும்
ஆஸி., அணியின் ஜோஸ் இங்லிசை ரூ.2 .60 கோடிக்கு பஞ்சாப் அணியும்
தென் ஆப்ரிக்காவின் ஜெரால்ட் கோயிட்சியை ரூ.1.25 கோடிக்கு குஜராத் அணியும்
இந்திய அணியின் புவனேஸ்குமாரை ரூ.10.75 கோடிக்கு பெங்களூரு அணியும்
முகேஷ் குமாரை ரூ. 8 கோடிக்கு டில்லி அணியும்
தீபக் சஹாரை ரூ.9.25 கோடிக்கு மும்பை அணியும்
அக்ஷ்தீப்பை ரூ.8 கோடிக்கு லக்னோ அணியும்
நியூசிலாந்து அணியின் லாக்கி பெர்குசன் ரூ.2 கோடிக்கு பஞ்சாப் அணியும்
ஆப்கன் அணியின் காஜன்பரை ரூ.4.80 கோடிக்கு மும்பை அணியும்
துஷார் தேஷ்பாண்டைவை ரூ.6.60 கோடிக்கு ராஜஸ்தான் அணியும் ஏலத்தில் எடுத்தன.
இன்றைய ஏலத்தில் கேன் வில்லியம்சன், கிளென் பிலிப்ஸ், அஜின்க்யா ரஹானே, மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, ஷர்துல் தாக்கூர், டேரில் மிச்சல், ஷா ஹோப், கேஎஸ் பரத், அலெக்ஸ் கரே, டேனாவேன் பெராரியா, முஜீப் உர் ரஹ்மான், அகீல் ஹூசைன், அடில் ரஷீத், கேசவ் மகராஜ் ஆகியோரை யாரும் எடுக்கவில்லை.