sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

/

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

15


UPDATED : ஏப் 15, 2024 03:47 PM

ADDED : ஏப் 14, 2024 07:09 AM

Google News

UPDATED : ஏப் 15, 2024 03:47 PM ADDED : ஏப் 14, 2024 07:09 AM

15


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான் : இஸ்ரேல் மீது ஈரான் எந்நேரமும் போர் தொடுக்கலாம் என எச்சரித்த நிலையில் இன்று(ஏப்.,14) காலை இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை துவக்கியது.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர், தற்போது இஸ்ரேல் - ஈரான் இடையேயான போராக எந்த நிமிடமும் வெடிக்கலாம் என அமெரிக்கா எச்சரித்தது. நட்பு நாடான இஸ்ரேலுக்கு உதவும் வகையிலும், அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க படைகளை பாதுகாக்கவும், கூடுதல் படைகளை அமெரிக்கா அனுப்பி வைத்து களத்தில் குதிக்க தயாராகி உள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையேயான போர், கடந்தாண்டு அக்டோபரில் துவங்கியது.

ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதியில் கடும் சேதமும், அதிக உயிர் பலியும் ஏற்பட்டுள்ளன.

வான்வழி தாக்குதல்


இந்த போரில், பாலஸ்தீனம் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, சில மேற்காசிய நாடுகளும் களத்தில் குதித்தன.

இந்த நாடுகள் நேரடியாக களத்தில் இறங்காமல் ஹவுதி, ஹொஸ்பெல்லா போன்ற பயங்கரவாத அமைப்புகளை களத்தில் இறக்கின. யூதர்களின் நாடாக கருதப்படும் இஸ்ரேலுக்கும், முஸ்லிம் நாடுகளுக்கும் இடையேயான போராக, ஒரு கட்டத்தில் இது உருவெடுத்தது.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக, லெபனானில் இருந்து இயங்கும், ஈரானின் ஆதரவு பெற்ற ஹொஸ்பெல்லா அமைப்பு, இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தியது; இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வந்தது.

அந்த வகையில், சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஹொஸ்பெல்லா பயங்கரவாதிகளை குறி வைத்து, இஸ்ரேல் சமீபத்தில் ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தியது.

பதற்றம்


இந்த தாக்குதல்களின்போது, டமாஸ்கசில் உள்ள ஈரானின் துாதரகத்தின் மீதும் சில ஏவுகணைகள் விழுந்தன. இதில், ஈரான் ராணுவத்தின் உயரதிகாரிகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்தது; கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறியது. இதையடுத்து, மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றம் உருவானது.

இந்த சூழ்நிலையில், தன் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், ''இஸ்ரேல் மீது ஈரான் எந்த நிமிடத்திலும் தாக்குதல்களை நடத்தலாம்,'' என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று எச்சரிக்கை விடுத்தார்.

தன் நட்பு நாடான இஸ்ரேலுக்கு உதவவும், அந்த பிராந்தியத்தில் உள்ள தன் படைகளை பாதுகாக்கவும், கூடுதலாக இரண்டு போர்க் கப்பல்கள் உள்ளிட்டவற்றை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.

சரக்கு கப்பல் சிறைபிடிப்பு

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், வளைகுடா பகுதியில் சென்ற, இஸ்ரேலுக்கு சொந்தமான 'எம்.சி.எஸ்.ஏரிஸ்' என்ற சரக்கு கப்பலை, ஈரான் படை சிறைபிடித்துள்ளது. இந்த கப்பலில் இருப்பவர்களில், 17 பேர் இந்தியர்கள் என கூறப்படுகிறது. 'இந்த பிராந்தியத்தில் தேவையில்லாத பதற்றத்தை ஈரான் உருவாக்கி வருகிறது. நிலைமை மோசமடைந்தால், அதற்காக ஈரான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என, இஸ்ரேல் எச்சரித்துள்ளது.



ஈரானை தவிர்த்த விமானங்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்கும்படி, இந்தியர்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்நிலையில், ஈரான் வான்வழியை, 'ஏர் இந்தியா' உள்ளிட்ட இந்திய விமான நிறுவனங்கள் தவிர்த்துள்ளன. ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவற்றுக்கு செல்லும் விமானங்கள், மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. இதனால், பயண நேரம் குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் வரை அதிகமாவதாக கூறப்படுகிறது. பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும், மேற்காசிய நாடுகளுக்கு பயணம் செய்வது தொடர்பாக எச்சரிக்கை விடுத்து உள்ளன.



இந்நிலையில் இன்று(ஏப்.,14) ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேல் படைத்தளம் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் ராணுவம் ஈரான் ட்ரோன்களை இடைமறித்து தாக்கி வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையே ஏவுகணை தாக்குதல் நடந்து வரும் சூழலில் ஈராக், ஜோர்டான், லெபனான் நாடுகள் தங்களது வான் எல்லை மூடியுள்ளதாக தெரிவித்துள்ளன.






      Dinamalar
      Follow us