பஹ்ரைனில் அமேசான் தரவு மையத்தை குறிவைத்து தாக்குதல்; ஈரான் அறிவிப்பு
பஹ்ரைனில் அமேசான் தரவு மையத்தை குறிவைத்து தாக்குதல்; ஈரான் அறிவிப்பு
ADDED : ஜூலை 24, 2026 05:22 PM
டெஹ்ரான்: பஹ்ரைனில் அமேசான் நிறுவன கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளதாக ஈரான் புரட்சிகர காவல்படையினர் அறிவித்துள்ளனர்.
ஈரான், அமெரிக்கா இடையேயான போர் நிறுத்தம் ஒப்பந்தம் கடந்த மாதம் ரத்து செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.
அமெரிக்க படைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க கட்டமைப்புகளை குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில் பஹ்ரைனில் உள்ள அமேசான் நிறுவனத்தின் தரவுகள் மையம் மீது ஈரானின் புரட்சி கர காவல்படை தாக்குதல் நடத்தி இருக்கிறது.
தாக்குதல் குறித்து ஈரானிய புரட்சிகர காவல்படை வெளியிட்டுள்ள அறிவிப்பு;
குழந்தைகளை கொல்லும் அமெரிக்க ராணுவத்திற்கு உளவுத்துறை தகவல்களை வழங்குவதில் ஆதரவு தந்து, முக்கிய பங்காற்றும் அந்நாட்டு நிறுவனமான அமேசானின் கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்தி, அது அழிக்கப்பட்டுவிட்டது.
இவ்வாறு ஈரானிய புரட்சிகர காவல் படை கூறி உள்ளது.
எனினும், இந்த தாக்குதல் பற்றியும், அதன் உண்மைத்தன்மை குறித்து பஹ்ரைன், அமெரிக்கா நாடுகள் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை.
