sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஈரானில் 800 பேரின் மரண தண்டனை ரத்து; அதிபர் டிரம்ப் பாராட்டு

/

ஈரானில் 800 பேரின் மரண தண்டனை ரத்து; அதிபர் டிரம்ப் பாராட்டு

ஈரானில் 800 பேரின் மரண தண்டனை ரத்து; அதிபர் டிரம்ப் பாராட்டு

ஈரானில் 800 பேரின் மரண தண்டனை ரத்து; அதிபர் டிரம்ப் பாராட்டு

6


UPDATED : ஜன 17, 2026 12:07 PM

ADDED : ஜன 17, 2026 11:58 AM

Google News

UPDATED : ஜன 17, 2026 12:07 PM ADDED : ஜன 17, 2026 11:58 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: 800க்கும் மேற்பட்டோருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ரத்து செய்ததற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் அரசை பாராட்டினார்.

ஈரானில் பணவீக்கம் அதிகரித்ததன் எதிரொலியாக கடந்தாண்டு டிசம்பரில் இருந்து மக்கள் தொடர் போராட்டங்களில் இறங்கி உள்ளனர். போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துக் கொண்டே வரும் சூழலில், கிட்டத்தட்ட 3000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

வன்முறையில் ஈடுபட்டு பொதுசொத்துகளை சேதப்படுத்தியவர்களுக்கு அந்நாட்டு சட்டத்தின்படி, தூக்கு தண்டனை விதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்தது. இந்த சூழலில், அந்நாட்டு வெளியுறவுத்துறை அப்பாஸ் அராக்சி, போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஈரானில் 800 பேரை நேற்று தூக்கில் போட திட்டமிடப்பட்டு இருந்தது. அதனை அவர்கள் ரத்து செய்துள்ளனர். இதனை நான் பெரிய அளவில் மதிக்கிறேன். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'ஈரானில் 800க்கும் மேற்பட்டோரின் மரண தண்டனைகள் ரத்து செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்






      Dinamalar
      Follow us